குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (2025 ஜூன் 27) குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தின நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார்
प्रविष्टि तिथि:
26 JUN 2025 2:50PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (2025 ஜூன் 27) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் 'குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தினம் 2025' நிகழ்வுக்கு தலைமை வகிக்கிறார். இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, காதி கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் ஆகியோரும் அமைச்சகத்தின் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இது மிகவும் மீட்சித்தன்மையுடனும், போட்டித்தன்மையுடனும் கூடிய எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள 'குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான பல்வேறு முயற்சிகளுக்கான தளமாகவும் இந்தத் தினம் அமைந்துள்ளது.
நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குறு, சிறு நிறுவனங்களுக்கு கடன் ஆதரவை வழங்கும் கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு தபால் தலையை வெளியிடவுள்ளார்.
அமைச்சகத்தின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளம் வாயிலான பூசல்கள் தீர்வு தளத்தையும் குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்க உள்ளார்.
குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான 5-வது ஹேக்கத்தான் போட்டியையும் குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்க உள்ளார்.
குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை தொடர்பான பயனுள்ள தகவல்களையும் நுண்ணறிவுகளையும் வழங்கும் எம்எஸ்எம்இ பத்திரிகா என்ற இதழையும் குடிரயசுத்தலைவர் வெளியிட உள்ளார். குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பான சிறு நூலும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139800
**
AD/TS/PLM/KPG/KR/DL
(रिलीज़ आईडी: 2139942)
आगंतुक पटल : 13