பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா மாநில அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

Posted On: 20 JUN 2025 7:48PM by PIB Chennai

ஜெய் ஜகன்னாத்!

ஜெய் ஜகன்னாத்!

ஜெய் பாபா லிங்கராஜ்!

எனது அன்பான ஒடிசா மாநில மக்களுக்கு வணக்கங்கள்!

ஒடிசாவில் பிஜேபி அரசு பொறுப்பேற்று வெற்றிகரமாக இன்றுடன் (ஜூன் 20) ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி நடைபெறும் இந்த விழா பொதுச் சேவைக்கும், மக்கள் நம்பிக்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள கோடிக்கணக்கான வாக்காளர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு இதுவொரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். ஒடிசாவில் உள்ள  மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் தீரு மோகன் மஜ்ஹி மற்றும் அவரது சகாக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்து, ஒடிசா மாநில வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளீர்கள்.

நண்பர்களே,

ஒடிசா ஒரு மாநிலம் மட்டுமின்றி நாட்டின் பாரம்பரியத்தில் ஒரு தெய்வீக நட்சத்திரமாகவும் திகழ்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, ஒடிசா மாநிலம் இந்திய நாகரிகத்தையும் நமது கலாச்சாரத்தையும் வளப்படுத்தியுள்ளது. அதனால்தான் இன்று, வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற தாரகமந்திரத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

ஒடிசாவில் பிஜேபி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில், நீங்கள் அனைவரும் ஜெகந்நாதரின் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பகவான் ஜெகன்நாதர் தெய்வமாக  மட்டுமின்றி, நம் அனைவருக்கும் உத்வேகத்தையும், உற்சாகத்தையும் வழங்குபவராகவும் இருக்கிறார். அவரது ஆசியால் லட்சக்கணக்கான பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதற்கு மாநில அரசுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டவுடன், ஜெகன்நாதர் கோயிலின் நான்கு வாயில்களும் திறக்கப்பட்டதுடன் புதையல் பெட்டகம் அறையும் திறக்கப்பட்டுள்ளது. இது அரசியல் ஆதாயம் அல்லது தேர்தல் வெற்றி என்றில்லாமல் கோடிக்கணக்கான பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையை மதிக்கும் செயலாக உள்ளது.

நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா சென்றிருந்தேன். அப்போது அமெரிக்க அதிபர் திரு டிரம்ப் அமெரிக்காவுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு அந்நாட்டு அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், ஜெகன்நாதர் பூமிக்குச் செல்வது எனக்கு மிகவும் அவசியம் என்று அவரிடம் எடுத்துக் கூறினேன். பின்னர் அவரது அழைப்பை மரியாதையுடன் நிராகரித்தேன். உங்கள் அன்பும், ஜெகன்நாதர் மீதான பக்தியும் என்னை இந்தப் புனித பூமிக்கு ஈர்த்துள்ளன.

சகோதர சகோதரிகளே,

நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பல தசாப்தங்களாக, மக்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமுமின்றி இருந்ததுடன், நாடும் வளர்ச்சியில் பின்தங்கியிருந்தது. திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதமும், சில திட்டங்கள் முடக்கப்பட்டும் இருந்தன. ஊழல் நாட்டின் அடையாளமாக மாறியிருந்தது. இதற்போது, கடந்த சில ஆண்டுகளாக, நாடு விரைவான பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், பிஜேபி முதன்முறையாக ஆட்சி பொறுப்பேற்ற மாநிலங்களில்  பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது சமூக பொருளாதார மாற்றத்திற்கான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிப்பதாக உள்ளது.

***

(Release ID: 2138128)
AD/TS/SV/RR/KR


(Release ID: 2139778)