பிரதமர் அலுவலகம்
பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர், ஈரான் அதிபருடன் பேச்சு
தீவிரத்தைக் குறைத்தல், பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவைதான் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான வழிகள் என்பதைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
22 JUN 2025 3:36PM by PIB Chennai
பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து, ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷஷ்கியனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (22.06.2025) விரிவான உரையாடலை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தைகளின்போது, சமீபத்திய பதற்றங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, நீண்டகால பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு போரின் தீவிரத்தை குறைப்பது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷஷ்கியனுடன் @drpezeshkian பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினேன். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், நிலைமையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், உடனடியாக போரின் தீவிரத்தைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினேன்."
****
(Release ID: 2138687)
AD/TS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2138693)
आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam