பிரதமர் அலுவலகம்
ஜி7 உச்சிமாநாட்டில் இடையே இங்கிலாந்து பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
प्रविष्टि तिथि:
18 JUN 2025 2:55PM by PIB Chennai
கனடாவில் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற 51-வது ஜி7 உச்சி மாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடைந்து வருவதை பிரதிபலிப்பதாக உள்ளதென்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மருடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது என்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் வலுவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையேயான நட்புறவு மேலும் வலுபெறும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவதென முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.”
-----
(Release ID: 2137196)
VJ/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2137284)
आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam