பிரதமர் அலுவலகம்
2025 நார்வே சதுரங்கப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த குகேஷுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2025 8:06PM by PIB Chennai
2025 நார்வே சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ததற்காக குகேஷுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்."மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். 2025 நார்வே சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான அவரது முதல் வெற்றி, அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது." என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"குகேஷின் அசாத்தியமான சாதனை! மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். 2025 நார்வே சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான அவரது முதல் வெற்றி, அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்."
***
AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2133416)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada