உள்துறை அமைச்சகம்
மத்திய பாதுகாப்புப் படை மற்றும் அசாம் ரைபிள்ஸில் அதிகாரி பதவிக்குக் கீழே உள்ள பணியாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளில் ஒரு பதவிக்கு மேல் கௌரவப் பதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளது
Posted On:
29 MAY 2025 6:25PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் அதிகாரி பதவிக்குக் கீழே உள்ள பணியாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளில் ஒரு பதவிக்கு மேல் கௌரவப் பதவி வழங்க உள்துறை அமைச்சகம் ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் எடுக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, கான்ஸ்டபிள் பதவியில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு ஓய்வு பெறும் பணியாளர்களின் சுயமரியாதை, பெருமை மற்றும் மன உறுதியை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸில் அதிகாரி பதவிக்குக் கீழே உள்ள பணியாளர்கள் (கான்ஸ்டபிள் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை) நீண்ட மற்றும் பாராட்டத்தக்க சேவைக்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு, எந்தவொரு நிதி அல்லது ஓய்வூதிய சலுகைகளும் இல்லாமல் அவர்களின் சேவையின் கடைசி நாளில் ஒரு நிலை உயர்ந்த கௌரவப் பதவி வழங்கப்படும்.
தகுதி அளவுகோல்கள்
பணியாளர்கள் ஓய்வு பெறும் போது அனைத்து பதவி உயர்வு அளவுகோல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
பணியாளர்கள் நல்ல மற்றும் சுத்தமான சேவைப் பதிவைக் கொண்டிருக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளுக்கான பணியாளர்களின் ஆண்டு செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையின் மதிப்பீடு குறைந்தபட்சம் 'நல்லது' ஆக இருக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் பணியாளர்கள் எந்த பெரிய தண்டனையையும் பெற்றிருக்கக்கூடாது.
பணியாளர்களின் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
துறை விசாரணை மற்றும் கண்காணிப்பு ஒப்புதல் கட்டாயமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132429
***
AD/RB/DL
(Release ID: 2132522)