நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட பங்குதாரர் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது
प्रविष्टि तिथि:
28 MAY 2025 7:55PM by PIB Chennai
இன்றைய நுகர்வோர் விழிப்புடன், தகவலறிந்தவர்களாக, தங்கள் உரிமைகள் குறித்து அதிகளவில் அறிந்தவர்களாக உள்ளனர் - அவர்கள் ஏமாற்றத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் வர்த்தகத்தில் அதிகரித்து வரும் நுகர்வோர் பிரச்சினைகள் குறித்த கவலையை நிவர்த்தி செய்வதற்காக இன்று ஒரு உயர்மட்ட பங்குதாரர் கூட்டத்திற்கு அமைச்சர் தலைமை தாங்கினார்.
ஏமாற்றும் இணையவழி நடைமுறைகளை நீக்குவதில் கவனம் செலுத்தும் உரையாடலுக்காக, முக்கிய மின்னணு வணிக நிறுவனங்கள், தொழில் சங்கங்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் முக்கிய பிரதிநிதிகளை ஒன்றிணைத்த கூட்டத்தை இந்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
பொறுப்பான தொழில்துறை நடத்தையின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார், நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த வழிகாட்டுதல்கள் முன்னணி மின்னணு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் தீவிர ஆலோசனைகளின் விளைவாகும் என்றும் கூறினார்.
சமீபத்திய முன்னேற்றங்களை எடுத்துரைத்த திரு ஜோஷி, தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான புகார்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதைக் குறிப்பிட்டார். இதை நிவர்த்தி செய்ய, அனைத்து முக்கிய மின்னணு வணிக நிறுவனங்களும் அவர்களின் தளங்களில் இத்தகைய பிரச்சினைகளைக் கண்டறிந்து அகற்ற வழக்கமான உள் தணிக்கைகளை நடத்துமாறு உத்தரவிட்டார். "மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தலையிடும் வரை நிறுவனங்கள் காத்திருக்கக்கூடாது. அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பே அவர்கள் இந்த ஏமாற்று நடைமுறைகளை முன்கூட்டியே அகற்ற வேண்டும். இது வெறும் ஒழுங்குமுறை இணக்கம் மட்டுமல்ல, இது உங்கள் நுகர்வோரிடம் நம்பிக்கையை வளர்ப்பது பற்றியது," என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132170
***
AD/SM/DL
(रिलीज़ आईडी: 2132196)
आगंतुक पटल : 11