பிரதமர் அலுவலகம்
திரு. என். டி. ராமராவ் அவர்களுக்கு பிரதமர் அஞ்சலி
प्रविष्टि तिथि:
28 MAY 2025 9:41AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று திரு. என். டி. ராமராவ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார். "சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்" என்று திரு. மோடி கூறினார்.
பிரதமர் சமூக வலைதளமான எக்ஸ் இல் பதிவிட்டதாவது:
"என்.டி.ஆர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது சினிமா படைப்புகளும் தொடர்ந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. நாம் அனைவரும் அவரால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம்.
எனது நண்பர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள என்.டி.ஏ அரசு என்.டி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற பாடுபடுகிறது."
***
(Release ID: 2131855)
AD/SM/RR
(रिलीज़ आईडी: 2131892)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam