தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவில் இருந்து அனைத்துக் கட்சிக் குழுவினர் குவைத் பயணம் (26-27 மே 2025)
Posted On:
25 MAY 2025 3:18PM by PIB Chennai
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒன்றுபட்ட மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எடுத்துரைக்கும் நோக்கில் ராஜீய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஆகியோர் அடங்கிய இந்தியாவின் அனைத்துக் கட்சிக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையில் 2025 மே 26 முதல் 27 வரை குவைத்திற்கு பயணம் செய்யவுள்ளது.
இந்தக் குழுவின் உறுப்பினர்கள் :
i) திரு. பைஜயந்த் ஜெய் பாண்டா, நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை; முன்னாள் உறுப்பினர் (மாநிலங்களவை) குழுத் தலைவர்
ii) டாக்டர் நிஷிகாந்த் துபே, நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை), தலைவர், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழு
iii) திருமதி. எஸ் பங்நோன் கோயங்க, நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்.
iv) திருமதி. ரேகா சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர்
v) திரு அசாதுதீன் ஓவைசி, நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை), அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர்
vi) திரு சத்னம் சிங் சாந்து, நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), நிறுவனர் வேந்தர், சண்டிகர் பல்கலைக்கழகம்
vii) திரு குலாம் நபி ஆசாத், முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், முன்னாள் முதல்வர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை),
viii) திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, முன்னாள் வெளியுறவு செயலாளர், அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்திற்கான முன்னாள் தூதர்
குவைத்தில் தங்கியிருக்கும் காலத்தில், இந்தக் குழுவினர் குவைத் அரசின் மூத்தப் பிரமுகர்கள், சிவில் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், சிந்தனையாளர்கள், ஊடகங்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் பல்வேறு பிரிவினருடன் கலந்துரையாடுவார்கள்.
*********
(Release ID: 2131129)
TS/SMB/SG
(Release ID: 2131155)