பிரதமர் அலுவலகம்
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் சிறந்த சாதனைக்காகப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
17 MAY 2025 9:10AM by PIB Chennai
தோஹா டயமண்ட் லீக் போட்டி 2025-ல் 90 மீட்டர் தூரத்தை எட்டியதற்காகவும், தனிப்பட்ட சாதனையாக சிறந்த ஈட்டி எறிதல் தூரத்தை அடைந்ததற்காகவும் நீரஜ் சோப்ராவை பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார். இது அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஆர்வத்தின் விளைவு என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இது ஒரு அற்புதமான சாதனை! தோஹா டயமண்ட் லீக் 2025-ல் 90 மீட்டர் தூரத்தை எட்டியதற்காகவும், தனிப்பட்ட சிறந்த தூரம் ஈட்டி எறிதல் சாதனையை அடைந்ததற்காகவும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். இது அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஆர்வம் ஆகியவற்றின் விளைவாகும். இதில் இந்தியா மகிழ்ச்சியடைந்து பெருமை கொள்கிறது." @Neeraj_chopra1
***
TS/PLM/DL
(रिलीज़ आईडी: 2129278)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada