குடியரசுத் தலைவர் செயலகம்
58-வது ஞானபீட விருதினைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
16 MAY 2025 6:30PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (16.05.2025) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராம் பத்ராச்சார்யாவுக்கு 58-வது ஞானபீட விருதினைக் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஜகத்குரு ராம் பத்ராச்சார்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த ஞானபீட விருது பெற்று இந்த நிகழ்வில் பங்கேற்க இயலாமல் போன இந்தி மொழிக் கவிஞர் குல்சாருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். குல்சார் அவர்கள் முழுமையாக குணமடைந்து கலை, இலக்கியம், சமூகம் மற்றும் தேசத்திற்கு தொடர்ந்து தீவிர பங்களிப்பை செய்திடவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
ஸ்ரீ ராம் பத்ராச்சார்யா பற்றி குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் மிகச்சிறந்த உதாரணமாக அவர் விளங்குகிறார் என்றார். அவரது பன்முக பங்களிப்புகளை பாராட்டிய திருமதி திரௌபதி முர்மு, மாற்றுத்திறனாளியாக உள்ள போதும் தெய்வீகப் பார்வையுடன் இலக்கியத்திற்கும், சமூகத்திற்கும் அவர் மிகச்சிறந்த சேவை செய்து வருகிறார் என்று கூறினார். அவரது புகழ்மிக்க வாழ்க்கையிலிருந்து ஊக்கம் பெற்று எதிர்கால தலைமுறைகள் இலக்கிய உருவாக்கத்திலும், சமூக கட்டமைப்பிலும், தேசக் கட்டமைப்பிலும் தொடர்ந்து முன்னேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129148
***
SM/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2129169)
आगंतुक पटल : 29