ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்கள் ஆதார் எண்களை உரிமைப் பதிவேட்டுடன் ஒருங்கிணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் திரு. சந்திரசேகர் பெம்மசானி வலியுறுத்தியுள்ளார்

Posted On: 15 MAY 2025 2:22PM by PIB Chennai

மாநிலங்கள் ஆதார் எண்களை உரிமைப் பதிவேடுகளுடன் ஒருங்கிணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு. சந்திரசேகர் பெம்மசானி வலியுறுத்தியுள்ளார். ஆள்மாறாட்டம் போன்ற சட்ட விரோத பதிவுகளை நீக்குவதற்கும், நிலம் சார்ந்த புவி குறியீடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பிரதமரின் விவசாயிகள் நிதி ஆதரவுத் திட்டம், மற்றும் பயிர் காப்பீடு போன்ற பல்வேறு நன்மைகளை இலக்காகக் கொண்டு நில உரிமையை தனித்துவ டிஜிட்டல் அடையாளத்துடன் இணைப்பதை உறுதி செய்யும் வகையிலான சீர்திருத்த நடவடிக்கையாகும்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் இன்று டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெறும் இரண்டு நாள் தேசிய கணக்கெடுப்பு / மறு கணக்கெடுப்பு பயிலரங்கு ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், மறு கணக்கெடுப்பு, டிஜிட்டல் மயமாக்கல், காகிதப் பயன்பாடற்ற அலுவலக நடைமுறைகள், நீதிமன்ற வழக்கு மேலாண்மை மற்றும் ஆதார் ஒருங்கிணைப்பு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை விரிவாகவும், வெளிப்படைதன்மையுடனும் கூடிய நில நிர்வாக சூழல் அமைப்பை உருவாக்க இது உதவிடும் என்று கூறினார். டிஜிட்டல் அடிப்படையிலான பதிவுகள் கள யதார்த்தத்துடன் பொருந்தும்போது, சரியான கணக்கெடுப்புகள் நிலத்தின் பொருளாதார மதிப்பை மேம்படுத்தும் என்றும், வங்கிகள் நம்பிக்கையுடன் அதன் மீது கடன் வழங்க முடியும் என்றும், வணிகர்கள் நம்பிக்கையுடன் உறுதியான முதலீடுகளை மேற்கொள்ளமுடியும் என்றும், விவசாயிகள் வேளாண் ஆதரவு நிதியைப் பெறுவதற்கும் உதவிடும் என்று அவர் கூறினார்.

தெளிவான, தீர்க்கமான மற்றும் தற்போதைய நிலப் பதிவுகள் தொடர்பான நீண்டகாலப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம் தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் மயமாக்கல், ஒருங்கிணைப்பு, போன்ற நடவடிக்கைகள் மூலம் நில நிர்வாகத்தில் மாற்றங்களை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். "விரைவான போக்குவரத்துக்கான நெடுஞ்சாலைகள், நவீன நகரங்கள், பாதுகாப்பான வீடுகள் மற்றும் நிலையான விவசாயம் போன்ற வளர்ச்சித் திட்டங்களை விரிவாக மேற்கொள்ளமுடியும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், நிலுவையில் உள்ள முக்கிய அங்கமான கணக்கெடுப்பு மற்றும் மறு கணக்கெடுப்புப் பணிகள் இதுவரை நான்கு சதவீத கிராமங்களில் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தப் பணி மக்கள் நிர்வாகம், தொழில்நுட்பம் மற்றும் மக்கள“ பங்கேற்புடன் கூடிய பணியாகும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128829

***


SM/SV/RR/RJ


(Release ID: 2128836)