குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
உண்மையான அதிகாரமளித்தல் என்பது தனிநபர்களை கை தூக்கி விடுவதன் மூலம் சாத்தியமாகும்: குடியரசு துணைத் தலைவர்
Posted On:
13 MAY 2025 2:26PM by PIB Chennai
இந்தியக் குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், இலவசங்கள், நன்கொடைகள் மூலம் ஒரு நபருக்கு அதிகாரமளிப்பது உண்மையான அதிகாரமளித்தல் அல்ல என்றும் உங்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மூலம் அவர்கள் தாங்களாகவே அதிகாரம் பெறுவதே உண்மையான அதிகாரம் அளித்தல் ஆகும் என்று கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று காரோ ஹில்ஸ், காசி ஹில்ஸ் மற்றும் ஜெயின்டியா ஹில்ஸ் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மேகாலயாவின் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களிடம் உரையாற்றிய திரு தன்கர், “நமது நாட்டின் வடகிழக்கு பிராந்தியமானது ‘கிழக்கில் செயல்பட ‘கிழக்கு நோக்கிப் பாருங்கள்’ என்ற திட்டம் மூலம் மிகவும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கமாகத் திகழ்கிறது என்று கூறினார்.
வடகிழக்கு பகுதியின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், மேகாலயாவானது சுற்றுலா, சுரங்கம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் மாநிலத்தின் சாதனைகளைப் பாராட்டினார். மத்திய மற்றும் மாநில அளவில் தொலைநோக்கு தலைமையையும் அவர் பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அடையப்பட்ட பத்தாண்டுக்கால நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சியைஅவர் பாராட்டினார், “பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் உலகமே பொறாமைப்படும் மைல்கற்களை அடைய அதிகாரிகள் சரியான திசையில் செயல்படுவதற்கு ஊக்குவிக்கும் தொலைநோக்கு தலைமை இது” என்று கூறினார்.
மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியால் தீர்மானிக்கப்படுகிறது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 66,000 கோடிக்கு மேல் இருக்கும் என்பது ஒரு பெரிய மாநிலத்தின் தகுதி நிலையாகும் என்றார். அனைவரையும்
உள்ளடக்கிய வளர்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறிய அவர், இந்த மாநிலம் சுற்றுலா, சுரங்கம், தகவல் தொழில்நுட்பம், சேவைத் துறை சுழல் நிதி ஆகியவற்றில் மகத்தான திறமையையும், மகத்தான ஆற்றலையும் கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
மேகாலயா முதலமைச்சர் திரு. கான்ராட் சங்மா மற்றும் பிற பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2128368)
TS/PKV/RR
(Release ID: 2128391)