பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஒரு தேர்வு மட்டுமே உங்களை ஒருபோதும் வரையறுத்துவிட முடியாது. உங்கள் பயணம் மிகப் பெரியது, உங்கள் வலிமை மதிப்பெண் பட்டியலுக்கு அப்பால் உள்ளதாகும்: பிரதமர்

Posted On: 13 MAY 2025 2:36PM by PIB Chennai

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். "இது அவர்களுடைய உறுதிப்பாடு, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் விளைவு ஆகும் என்று கூறினார். இன்றைய நாள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இந்த சாதனைக்கு உதவிய அனைவரின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் ஒரு நாள்" ஆகும் என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

"தங்கள் மதிப்பெண்களைப் பார்த்து சற்று மனச்சோர்வடைந்தவர்களுக்கு, நான் கூற விரும்புகிறேன் என்று குறிப்பிட்ட அவர், ஒரு தேர்வு மட்டுமே அவர்களை ஒருபோதும் வரையறுத்து விடமுடியாது என்று கூறினார். அவர்களுடைய பயணம் மிகப் பெரியது, அவர்களுடைய வலிமை மதிப்பெண் பட்டியலுக்கு அப்பால் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நம்பிக்கையுடன் இருக்கவும், ஆர்வமுடன்  இருக்கவும் என்று குறிப்பிட்ட பிரதமர், ஏனென்றால் பெரிய அம்சங்கள் காத்திருக்கின்றன" என்று கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

அன்புள்ள தேர்வு வீரர்களே,

சிபிஎஸ்இ, பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இது உங்கள் மன உறுதி, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் விளைவாகும். இந்த சாதனைக்கு உதவிய பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிறரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாளாகவும் இன்றைய நாள் உள்ளது.

தங்கள் மதிப்பெண்களைப் பார்த்து சற்று சோர்வடைந்தவர்களுக்கு, நான்  சொல்ல விரும்புகிறேன்:ஒரு தேர்வு மட்டுமே உங்களை ஒருபோதும் வரையறுத்து விடமுடியாது. உங்கள் பயணம் மிகப் பெரியது, உங்கள் வலிமை மதிப்பெண் பட்டியலுக்கு அப்பால் உள்ளது. நம்பிக்கையுடன் இருங்கள். ஆர்வமாக இருங்கள். ஏனென்றால் பெரிய விஷயங்கள் காத்திருக்கின்றன!.

தேர்வு வீரர்கள் எதிர்வரும் அனைத்து வாய்ப்புகளிலும் சிறந்த வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்!

***

(Release ID: 2128370)

TS/IR/AG/RR


(Release ID: 2128384)