பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூர்: பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியப் படைகள் துல்லியமான தாக்குதல்
Posted On:
07 MAY 2025 1:44AM by PIB Chennai
இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின.
மொத்தத்தில், ஒன்பது (9) பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.
இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை. அத்துமீறல் இல்லாதவை. இந்தத் தாக்குதலில் எந்த பாகிஸ்தானிய ராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதலை செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் கடைபிடித்துள்ளது.
25 இந்தியர்களும் ஒரு நேபாளத்தைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்ட இரக்கமற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படும்.
இன்று 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
***
(Release ID: 2127370)
AD/PLM/RR/KR
(Release ID: 2127392)
Visitor Counter : 393
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Nepali
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam