தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் 2025: ஒவ்வொரு படைப்பாளியையும் ஒரு நட்சத்திரமாக மாற்றும் ஒரு மக்கள் இயக்கம்.
Posted On:
04 MAY 2025 7:48PM
|
Location:
PIB Chennai
உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (வேவ்ஸ் 2025) முதல் பதிப்பு மும்பையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கண்காட்சியாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த உச்சிமாநாடு ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு சூழலியலுக்கான ஒரு முக்கிய ஒருங்கிணைப்பு புள்ளியாக உருவெடுத்தது, புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் செல்வாக்குமிக்க உள்ளடக்க படைப்பாளர்கள் முதல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பெருநிறுவனத் தலைவர்கள் வரை தொழில்துறையின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பங்கேற்பை ஈர்த்தது.
கண்காட்சிகள், குழு விவாதங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்புகளின் துடிப்பான கலவையுடன், இந்த நிகழ்வு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்களைக் கண்டது மற்றும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கின் வளர்ந்து வரும் உலகளாவிய சக்தி மையமாக இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லலின் கொண்டாட்டம், பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தனது துவக்க உரையில், வேவ்ஸ் என்பது வெறும் சுருக்கெழுத்து அல்ல, அது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய இணைப்பின் அலை என்று பிரதமர் குறிப்பிட்டார். திரைப்பட தயாரிப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், கேமிங், ஃபேஷன், இசை மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருவதாக பிரதமர் கூறினார். உலகப் படைப்பாளிகள் பெரிய கனவுகளைக் கண்டு தங்கள் கதைகளைச் சொல்ல வேண்டும்; முதலீட்டாளர்கள் தளங்களில் மட்டுமல்ல, மக்களிடமும் முதலீடுகளை செய்ய வேண்டும்; மற்றும் இந்திய இளைஞர்கள், ஒரு பில்லியன் சொல்லப்படாத கதைகளை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். வேவ்ஸ்-ஐ இந்தியாவின் ஆரஞ்சு பொருளாதாரத்தின் விடியலாக அறிவித்த அவர், இளைஞர்கள் இந்தப் படைப்பு எழுச்சியை வழிநடத்தி, இந்தியாவை ஒரு உலகளாவிய படைப்பு மையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வேவ்ஸ் 2025 உச்சிமாநாட்டில் மத்திய தகவல் & ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஐந்து முக்கிய அறிக்கைகளை வெளியிட்டார். இந்த அறிக்கைகள் இந்தியாவின் செழிப்பான ஊடக மற்றும் பொழுதுபோக்கு சூழலியலின் விரிவான கண்ணோட்டத்தை முன் வைக்கின்றன, உள்ளடக்க உற்பத்தி, கொள்கை கட்டமைப்புகள் மற்றும் நேரடி நிகழ்வுகள் போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2126844®=3&lang=1
(Release ID: 2126844)
***
Release ID:
(Release ID: 2126924)
| Visitor Counter:
10