WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

உலகளாவிய ஐபி சூழலியலை மாற்ற வேண்டும்; அறிவுசார் சொத்துரிமை அனைத்து நாடுகளுக்கும் வேலைவாய்ப்பு, மேம்பாடு மற்றும் புத்தாக்கத்திற்கான கிரியா ஊக்கியாக செயல்படுகிறது: டேரன் டாங், தலைமை இயக்குநர், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு

 Posted On: 01 MAY 2025 8:06PM |   Location: PIB Chennai

மும்பையில் நடைபெற்று வரும் உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் "ஒலி -ஒளி கலைஞர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்களுக்கான ஐபி மற்றும் பதிப்புரிமையின் பங்கு" என்ற தலைப்பில் குழு விவாதம் இன்று நடைபெற்றது. இந்த அமர்வு உலகளாவிய பொழுதுபோக்கு, சட்ட மற்றும் படைப்புத் தொழில்களிலிருந்து செல்வாக்குமிக்க குரல்களை ஒன்றிணைத்து, டிஜிட்டல் யுகத்தில் படைப்பாளர்களை மேம்படுத்துவதில் அறிவுசார் சொத்துரிமை (ஐபி) உரிமைகளின் பங்கு குறித்து விவாதித்தது.

இந்தக் குழு, வளர்ந்து வரும் சட்டப்பூர்வ சூழலைப் பற்றி எடுத்துரைத்ததுடன், குறிப்பாக அங்கீகரிக்கப்படாத பயன்பாடு மற்றும் சுரண்டலுக்கு ஆளாகக்கூடிய கலைஞர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்களுக்கு, அறிவுசார் சொத்துரிமை உரிமைகள் குறித்த வலுவான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டியது.

மூத்த வழக்கறிஞர் திரு அமீத் தத்தா, அமர்வை நெறிப்படுத்தி, மதிப்புமிக்க நிபுணர்கள் மற்றும் படைப்பாளர்களின் குழுவிற்கு இடையே ஒரு துடிப்பான விவாதத்தை வழிநடத்தினார். உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தலைமை இயக்குநர் திரு. டேரன் டாங் குழுவில் இடம்பெற்றிருந்தார், அவர் கொள்கை கட்டமைப்புகள் மற்றும் உலகளவில் கலைஞர்களுக்கான பாதுகாப்புகளை வலுப்படுத்த அமைப்பின் முயற்சிகள் குறித்த உலகளாவிய கண்ணோட்டத்தை முன்வைத்தார். கடந்த 5 தசாப்தங்களாக இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை பயணம் அசாதாரணமானது என்றும் அதன் படைப்பு பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். அனைத்து நாடுகளுக்கும் வேலைவாய்ப்பு, மேம்பாடு மற்றும் புதுமைக்கான ஊக்கியாக ஐபி செயல்படுவதால், உலகளாவிய அறிவுசார் சொத்துரிமை சூழலியலை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார். உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் படைப்பு பொருளாதார தரவு மாதிரியைப் பற்றிப் பேசுகையில், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் படைப்பாளர்கள், படைப்பு பொருளாதாரத்தை அளவிடுவதற்கான சிறந்த அளவீடுகளைக் கண்டறிய இது உதவுகிறது என்று அவர் கூறினார்.

அமர்வு முழுவதும், குழு உறுப்பினர்கள் பதிப்புரிமை உரிமை, உரிமம் வழங்குதல், தார்மீக உரிமைகள், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் வேகமாக டிஜிட்டல்மயமாக்கப்படும் உலகில் அணுகல் மற்றும் பாதுகாப்பிற்கு இடையிலான சமநிலை குறித்து ஆழமாக ஆராய்ந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125906

***

(Release ID: 2125906)  

RB/DL


Release ID: (Release ID: 2125973)   |   Visitor Counter: 22