உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு 2024-ஆம் ஆண்டில் கூடுதலாக ரூ.153.36 கோடி மத்திய நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல்

Posted On: 29 APR 2025 6:23PM by PIB Chennai

2024 ஆம் ஆண்டில் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ரூ.153.36 கோடி கூடுதல் மத்திய உதவியை வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்  துறை அமைச்சர்  திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (என்டிஆர்எஃப்)பெறப்படும் இந்த உதவி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் (எஸ்டிஆர்எஃப்) கிடைக்கும் ஆண்டிற்கான தொடக்க நிலுவையில் 50% சரிசெய்தலுக்கு உட்பட்டது.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இயற்கை பேரழிவுகள் மற்றும் பேரிடர்களின் போது மாநில அரசுகளுடன் இந்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது.

இந்தக் கூடுதல் உதவி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ள நிதிக்கும் மேலானதாகும். 2024-25 நிதியாண்டில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் வழங்கியுள்ளது. கூடுதலாக, மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 19 மாநிலங்களுக்கு ரூ.4984.25 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 8 மாநிலங்களுக்கு ரூ.719.72 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2025-26 நிதியாண்டில், மத்திய அரசு எஸ்டிஆர்எஃப் இன் கீழ் ரூ.895.60 கோடியையும், என்டிஆர்எஃப் இன் கீழ் ரூ.929.633 கோடியையும் 07 மாநிலங்களுக்கு இதுவரை வழங்கியுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125242

*****

RB/DL


(Release ID: 2125286) Visitor Counter : 9