தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வாம்! அனிம், மங்கா, வெப்டூன்கள் மற்றும் உடைக்கேற்ற நடிப்பு (காஸ்ப்ளே) ஆகியவற்றில் அசல் இந்திய அறிவுசார் சொத்துக்களை வளர்த்தெடுப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய முயற்சி வேவ்ஸ் 2025-ல் நிறைவடையும்
பல மாதங்களாக பிராந்திய அளவில் போட்டிகள் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளீடுகளுக்குப் பிறகு, மே 1 முதல் 4, 2025 வரை மும்பையின் ஜியோ உலக மாநாட்டு மையத்தில் உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ்) 2025-ல் நடைபெறவுள்ளது. வேவ்ஸ் அனிம், மங்கா மற்றும் உடைக்கேற்ற நடிப்பு போட்டியின் ( வாம்!) தேசிய இறுதிச் சுற்றில் பங்கேற்க இந்தியா முழுவதும் உள்ள 11 நகரங்களில் இருந்து இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சங்கத்துடன் இணைந்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது அனிம், மங்கா, வெப்டூன்கள் மற்றும் காஸ்ப்ளே ஆகியவற்றில் அசல் இந்திய அறிவுசார் சொத்துக்களைக் கண்டுபிடித்து, வளர்ப்பது மற்றும் ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய முயற்சியாகும். இந்தப் படைப்பு முயற்சிகள் மற்றும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அவற்றின் படைப்பாளிகள், இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக உலகளாவிய தலைவர்கள், புதுமையாளர்கள், ஸ்டுடியோக்கள் மற்றும் படைப்பாளர்களை ஒன்றிணைக்கும் மைல்கல் முயற்சியான வேவ்ஸ் உச்சிமாநாட்டில் சிறந்த வெளிப்பாட்டு வாய்ப்பைப் பெறுவார்கள். "இந்தியாவில் உருவாக்கு, உலகத்திற்காக உருவாக்கு" என்ற தொலைநோக்குடன் நடத்தப்படும் வேவ்ஸ், இந்தியப் படைப்பாளிகளை பெரிய கனவுகளைக் காணவும், உலகளாவிய பார்வையாளர்களை அடையவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி ஆகியவற்றிற்கான இந்தியாவின் மிகப்பெரிய தளம் இதுவாகும். இந்தியாவில் உருவாக்குவோம் சவால்களுக்கு 1 1,100 சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட சுமார் 1 லட்சம் பதிவுகளுடன் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. விரிவான தேர்வு செயல்முறைக்குப் பிறகு, 750 தனித்துவமான சவால்களில் இருந்து 32+ இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125183
***
(Release ID: 2125183)
TS/PKV/AG/KR/DL