பிரதமர் அலுவலகம்
டாக்டர் கி. கஸ்தூரிரங்கன் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
Posted On:
25 APR 2025 2:34PM by PIB Chennai
இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்வித்துறையில் தலைசிறந்த ஆளுமையாகத் திகழ்ந்த டாக்டர் கி. கஸ்தூரிரங்கன் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இஸ்ரோவில் பணியாற்றிய அவர், விடாமுயற்சியுடன் இந்திய விண்வெளித் திட்டத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். "தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் டாக்டர் கஸ்தூரிரங்கன் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், நாட்டில் கற்றல் முறை முழுமையானதாகவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் இருப்பதை உறுதி செய்ததற்காக இந்தியா என்றென்றும் அவருக்கு நன்றியுடையதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல இளம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் தலைசிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்" என்று பிரதமர் திரு மோடி மேலும் கூறினார்.
சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்:
"இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் மிகவும் போற்றத்தக்கவராகத் திகழ்ந்த டாக்டர் கி. கஸ்தூரிரங்கனின் மறைவுக்கு மிகவும் வருத்தமடைகிறேன். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது தலைமைப் பண்பு மற்றும் தேசத்திற்கான தன்னலமற்ற சேவை மக்களால் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அவர், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை விடாமுயற்சியுடன் புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றார் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். இது நாட்டிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்ததாக அவர் கூறினார். அவரது சீரிய தலைமைப்பண்பு நாட்டின் லட்சியமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்படுவதை செயலாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
"தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதில் டாக்டர் கஸ்தூரிரங்கன் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், இந்தியாவில் கற்றல் முறையை முழுமையானதாகவும், தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதற்காக நாடு என்றென்றும் அவருக்கு நன்றியுடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பல இளம் விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகவும் டாக்டர் கி. கஸ்தூரிரங்கன் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி."
***
(Release ID: 2124254)
TS/SV/RJ/KR
(Release ID: 2124270)
Visitor Counter : 19
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam