நிலக்கரி அமைச்சகம்
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் புதிய ஊக்கத் தொகை திட்டம் நாட்டில் நிலத்தடி நிலக்கரி சுரங்கத்திற்கு உத்வேகம் அளிக்க வகை செய்கிறது
प्रविष्टि तिथि:
24 APR 2025 11:05AM by PIB Chennai
இந்தியாவின் நிலக்கரித் துறைக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக மத்திய நிலக்கரி அமைச்சகம் அதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அதிக மூலதன முதலீடு, நீண்ட கால சவால்களை எதிர்கொள்வது, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்கு உத்வேகம் அளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி சுரங்கத்தின் மேம்பாடு மற்றும் செயல்பாட்டை விரைவுபடுத்த, மத்திய நிலக்கரி அமைச்சகம் ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, நிலக்கரி சுரங்கங்களுக்கான வருவாய் பங்கீடு 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் குறைப்பு கணிசமான நிதி நிவாரணத்திற்கு வகை செய்வதுடன் திட்டங்களின் நிதி சார்ந்த நம்பகத்தன்மையையும் மேம்படுத்துகிறது.
நிலக்கரி சுரங்க முயற்சிகளுக்கான கட்டாய முன்கூட்டிய கட்டணத் தேவை முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க நிதிசார்ந்த தடைகளை நீக்குகிறது. நிலக்கரி உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிப்பதுடன் அதன் விரிவான திட்ட அமலாக்கத்தையும் எளிதாக்குகிறது.
இந்த ஊக்கத்தொகை தொகுப்பானது நிலக்கரி உற்பத்திக்கான செயல்திறனைப் பாதுகாக்கிறது. நிலத்தடி நிலக்கரி தொகுப்புக்கான செயல்திறன் பாதுகாப்புக்கு தற்போதுள்ள 50% தள்ளுபடி திட்டத்தை தடையில்லாமல் பூர்த்தி செய்ய உதவும்.
***
(Release ID: 2123992)
TS/SV/RR/KR
(रिलीज़ आईडी: 2124011)
आगंतुक पटल : 68