கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக பாரம்பரிய தினமான நாளை தொல்லியல் துறை நினைவுச்சின்னங்களைப் பார்வையிட நுழைவு கட்டணம் இல்லை

Posted On: 17 APR 2025 4:44PM by PIB Chennai

ஏப்ரல் 18-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பாரம்பரிய தினத்தை (நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம்) முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவோருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அறிந்து கொள்ள பார்வையாளர்களை ஊக்குவிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தொல்லியல் துறையின் பாதுகாப்பின் கீழ் 3,698 நினைவுச்சின்னங்கள் மற்றும் தலங்கள் உள்ளன. மத்திய தொல்லியல் துறை நாட்டின் வரலாற்று மரபு மற்றும் கட்டடக்கலை சிறப்புகளுடன் கூடிய இந்தத் தலங்களை மக்கள் பார்வையிட்டு அவற்றின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம், அதிக மக்கள் இந்த தினத்தில் அவற்றை பார்வையிடுவார்கள். இதன் மூலம் நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொண்டு ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள்.

 

***

TS/PLM/RR/KR/DL


(Release ID: 2122503) Visitor Counter : 35