WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவ்ஸ் 2025 இன் இந்தியாவில் படைப்போம் முன்முயற்சியின் கீழ் உள்ளடக்கத் திருட்டு எதிர்ப்பு சவாலுக்கான முதல் ஏழு இறுதிப் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்

 प्रविष्टि तिथि: 16 APR 2025 6:21PM |   Location: PIB Chennai

வேவ்ஸ் (உலக ஒலி ஒளி & பொழுதுபோக்கு உச்சிமாநாடு) 2025 இன் இந்தியாவில் படைப்போம் சவால்  சீசன் 1 இன் கீழ் ஒரு முன்னோடி முயற்சியான உள்ளடக்கத் திருட்டு எதிர்ப்பு சவாலின் இறுதிப் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேவ்ஸ் உச்சிமாநாட்டை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2025 மே 1-4 தேதிகளில் மும்பையில் ஏற்பாடு செய்துள்ளது. கைரேகை மற்றும் வாட்டர்மார்க்கிங் தீர்வுகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட உள்ளடக்கத் திருட்டு எதிர்ப்பு சவால், தொழில்துறை மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

செப்டம்பர் 12, 2024 அன்று தொடங்கப்பட்ட இந்த சவால், டிஜிட்டல் உள்ளடக்கத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சவாலில் நாடு முழுவதும் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து 1,600 க்கும் மேற்பட்ட பதிவுகள் மற்றும் 132 யோசனை சமர்ப்பிப்புகள் கிடைத்துள்ளன. நடுவர் குழுவின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, டிஜிட்டல் உள்ளடக்கப் பாதுகாப்பில் அவர்களின் திருப்புமுனை கண்டுபிடிப்புகளுக்காக 7 தனித்துவமான இறுதிப் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

மும்பையின் ஜியோ மையத்தில் 2025 மே 01 முதல் 04 வரை திட்டமிடப்பட்டுள்ள வேவ்ஸ் 2025 இன் போது ஏழு இறுதிப் போட்டியாளர்கள் தங்கள் தீர்வுகளை இறுதி நடுவர் குழு மற்றும் நேரடி பார்வையாளர்கள் முன் சமர்ப்பிப்பார்கள். வெற்றியாளர்கள், உச்சிமாநாட்டின் பிரம்மாண்டமான நிறைவு விழாவில் பாராட்டப்படுவார்கள்.

 

டிஜிட்டல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், முக்கியமான தொழில்நுட்பக் களங்களில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும் இந்தியாவின் பயணத்தில் உள்ளடக்கத் திருட்டு எதிர்ப்பு சவால் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122186

 

--

RB/DL


रिलीज़ आईडी: 2122253   |   Visitor Counter: 41

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Nepali , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam