தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவெக்ஸ் 2025-க்கான விண்ணப்ப காலக்கெடு ஏப்ரல் 21 வரை நீட்டிப்பு
Posted On:
16 APR 2025 5:47PM
|
Location:
PIB Chennai
தகவல் ஒலிபரப்பு அமைச்சகமானது இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்துடன் (IAMAI) இணைந்து ஊடக பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கான இந்தியாவின் முதன்மையான மேடையாக வேவெக்ஸ் 2025-ஐ (WAVEX 2025) நடத்துகிறது. தற்போது இது தொடர்பான இரண்டு முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பரந்த அளவிலான பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், புத்தாக்க கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதற்கும், தகுதி அளவுகோல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்ப காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டுக்கு பின்பு தொடங்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் வேவெக்ஸ் 2025-க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2020 அல்லது அதற்குப் பிறகு தொடங்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய இந்த அறிவிப்பு அதிக எண்ணிக்கையில் பங்கேற்பாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோரின் வலுவான ஆர்வத்துக்கும் கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், விண்ணப்ப காலக்கெடுவும் 2025 ஏப்ரல் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு ஆர்வமுள்ள ஊடக-தொழில்நுட்ப புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கு தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவும், தேசிய அரங்கில் இடம்பெறுவதற்கான வாய்ப்பைப் பெறவும் கூடுதல் கால அவகாசத்தை வழங்கும்.
https://wavex.wavesbazaar.com என்ற அதிகாரப்பூர்வ வேவெக்ஸ் தளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2122174
***
TS/PLM/AG/DL
Release ID:
(Release ID: 2122204)
| Visitor Counter:
33
Read this release in:
Odia
,
English
,
Malayalam
,
Gujarati
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada