குடியரசுத் தலைவர் செயலகம்
2023-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்
Posted On:
15 APR 2025 1:49PM by PIB Chennai
தற்போது பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவி செயலாளர்களாக பணியாற்றி வரும் 2023-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஆட்சிப்பணி அதிகாரிகள் குழு, இன்று (ஏப்ரல் 15, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தது.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், அசாதாரண உறுதிப்பாடு, கடின உழைப்பின் மூலம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளாக மாறியுள்ளதாக கூறினார். இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தற்போது இன்னும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவர அவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்தப் பதவியின் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்காக சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார்.
உரிமைகள் மற்றும் கடமைகளை அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
ஆட்சிப்பணி அதிகாரிகளின் உண்மையான சமூக மதிப்பு, சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அல்லாமல், உண்மையான வாழ்க்கை முறை, சிறந்த பணியால் தீர்மானிக்கப்படும் என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பொது ஊழியரும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
நேர்மை, உண்மை, எளிமை போன்ற வாழ்க்கை விழுமியங்களைப் பின்பற்றி முன்னேறுபவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பொது சேவையில் நேர்மை மிகவும் விரும்பத்தக்க கொள்கையாகும் என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நேர்மை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் உதாரணங்களை அவர்கள் முன்வைப்பார்கள் என்று பொது ஊழியரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் யுகத்தில் மக்களின் விருப்பங்கள் அதிகரித்து வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார். நிர்வாகிகளின் பொறுப்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் தங்கள் சக குடிமக்களுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளவும், உள்ளூர் முயற்சிகளில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் அவர் அறிவுறுத்தினார். மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் பொது நல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அவர் அறிவுறுத்தினார். உள்ளூர் மற்றும் மாநில அளவில் அவர்கள் செய்யும் வளர்ச்சி மற்றும் பொது நலப் பணிகள் தேசிய இலக்குகளை அடைய உதவும் என்று அவர் கூறினார்.
***
(Release ID: 2121828)