குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

வைசாகி, விஷு, போஹாக் பிஹு, பொய்லா போயிஷாக், மேஷாதி, வைஷாகடி மற்றும் புத்தாண்டு பிறப்பு தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 APR 2025 6:33PM by PIB Chennai

2025, ஏப்ரல் 13, 14, 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் வைசாகி, விஷு, போஹாக் பிஹு, பொய்லா போயிஷாக், மேஷாதி, வைஷாகடி மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறியிருப்பதாவது:

“வைசாகி, விஷு, போஹாக் பிஹு, பொய்லா போயிஷாக், மேஷாதி, வைஷாகடி, புத்தாண்டு  பிறப்பு ஆகிய புனிதமான நாட்களில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அறுவடை நேரத்தில் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள் நமது சமூக மரபுகளையும் வேற்றுமையில் ஒற்றுமையையும் குறிக்கின்றன. இந்தப் பண்டிகைகள் மூலம், நமது ‘அன்னதாதா’ விவசாயிகளின் கடின உழைப்பை மதிக்கிறோம். அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பண்டிகைகள் இயற்கையைப் பாதுகாப்பது,  நமது கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்ற செய்தியையும் வழங்குகின்றன.

இந்தத் துடிப்பான பண்டிகைகள் நமது நாட்டின் வளர்ச்சிக்காக உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற நம்மை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.”

****

SMB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2121299) வருகையாளர் எண்ணிக்கை : 65
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Malayalam