பிரதமர் அலுவலகம்
முத்ரா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
Posted On:
08 APR 2025 1:25PM by PIB Chennai
பயனாளி - வணக்கம் ஐயா, செல்லப்பிராணிகளை வளர்ப்பதிலிருந்து அது தொடர்பான ஒரு தொழில்முனைவோராக நான் மாறினேன் என்பது பற்றிய எனது கதையை இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது வணிக முயற்சியின் பெயர் கே-9 வேர்ல்ட். அதில் நாங்கள் அனைத்து வகையான செல்லப்பிராணி பொருட்கள், மருந்துகளை விற்பனை செய்கிறோம் சார். முத்ரா கடன் பெற்ற பிறகு, செல்லப்பிராணிகள் தொடர்பான தொழிலை விரிவுபடுத்தினேன் சார், விலங்குகள் மீது எனக்கு இருக்கும் அன்பு வித்தியாசமானது. நான் சாப்பிடுகிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல, ஆனால் நான் அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் சார்.
பிரதமர் - இங்கு வந்த பிறகு உங்களுக்கு நிறைய பிரபலம் கிடைக்குமா?
பயனாளி – ஆமாம், .
பிரதமர் - நீங்கள் வங்கியில் உள்ளவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்,
பயனாளி - நான் கோபிகிருஷ்ணன், கேரளாவைச் சேர்ந்த முத்ரா கடன் அடிப்படையிலான தொழில்முனைவோர். பிரதமரின் முத்ரா திட்டம் என்னை வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றியுள்ளது. எனது வணிகம் தொடர்ந்து செழித்து வளர்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் கொண்டு வருகிறது. அதே நேரத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
பிரதமர் - நீங்கள் துபாயிலிருந்து திரும்பி வரும்போது உங்கள் திட்டம் என்ன?
பயனாளி - நான் திரும்பி வந்தபோது, முத்ரா கடன் பற்றிய தகவல் எனக்கு கிடைத்தது, எனவே நான் அந்த நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தேன்.
பிரதமர் - அப்படியானால், நீங்கள் அங்கு இருந்தபோதுதான் இந்த விஷயம் தெரிய வந்ததா?
பயனாளி - ஆம். ராஜினாமா செய்த பிறகு, நான் இங்கு வந்தேன், பின்னர் முத்ரா கடனுக்கு விண்ணப்பித்து, இதைத் தொடங்கினேன்.
பிரதமர்- ஒரு வீட்டில் சூர்ய சக்தி அமைப்பை ஏற்படுத்தி முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
பயனாளி - அதிகபட்சம் இரண்டு நாட்கள்.
பயனாளி - நான் ஹவுஸ் ஆஃப் புச்கா உணவு நிறுவனத்தின் நிறுவனர். நான் வீட்டில் சமைப்பது வழக்கம். சுவை நன்றாக இருந்தது. எனவே எல்லோரும் என்னை கடை வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். பின்னர் அதைப் பற்றி தெரிந்துகொண்டு கடை வைத்தேன்.
பிரதமர் - நான் எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டேன் என்று சிலர் நினைக்கிறார்கள். உங்களிடம் ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ளது.
பயனாளி - ஆமாம் ஐயா. இப்போது எனக்கு 23 வயதாகிறது. எனவே எனக்கு ரிஸ்க் எடுக்கும் திறனும் நேரமும் உள்ளது. இளைஞர்கள் தங்களிடம் நிதி இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரசு திட்டங்கள் பற்றி தெரியாது. எனவே என் தரப்பிலிருந்து நான் அவர்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்க விரும்புகிறேன். முத்ரா கடன் போலவே, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத்திட்ட கடனும் உள்ளது. நீங்கள் வணிகம் செய்யலாம்.
பிரதமர் - நீங்கள் மிக வேகமாக முன்னேறி வருகிறீர்கள். வங்கி உங்களுக்கு கடன் வழங்குவதற்கு முன்பு உங்கள் நிலைமை என்ன?
பயனாளி - ஐயா, ஒட்டுமொத்தமாக, அது 2021. இதற்கு முன், நான் லட்சம், கோடியில் இல்லை; நான் ஆயிரக்கணக்கில் தான் இருந்தேன்.
பிரதமர் - சொல்லுங்க, என்ன பண்றீங்க?
பயனாளி - பேக்கரி-பேக்கரி.
பிரதமர் - பேக்கரி?
பயனாளி - ஆமாம் ஐயா.
பிரதமர் - நீங்கள் இப்போது எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள்?
பயனாளி - ஐயா, எனது மாத விற்றுமுதல் ₹2.5 முதல் ₹3 லட்சம்.
பிரதமர் - சரி, நீங்கள் எத்தனை பேரை வேலைக்கு அமர்த்துகிறீர்கள்?
பயனாளி - ஐயா, எங்களிடம் 7 முதல் 8 பேர் கொண்ட குழு உள்ளது.
பிரதமர் - சரி.
பயனாளி - ஐயா என் பெயர் லவ்குஷ் மெஹ்ரா. நான் போபால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். முன்பெல்லாம் நான் வேலை செய்து வந்தேன் சார். முத்ரா கடன் மூலம் உரிமையாளர்களாகி விட்டோம் சார். உண்மையில் நான் ஒரு எம்.பி.ஏ. மருந்துத் தொழில் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் 2021-ல் எனது வேலையைத் தொடங்கினேன். இன்றைய நிலவரப்படி 50 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பிரதமர் - முத்ரா திட்டம் இந்த மோடியைப் புகழ்வதற்காக அல்ல. முத்ரா திட்டம் எனது நாட்டின் இளைஞர்களுக்கு தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கும், உற்சாகத்தை உயர்த்துவதற்கும் தைரியத்தை அளிக்கும்.
பயனாளி - ஆமாம் ஐயா.
பயனாளி - ஆமாம் ஐயா. எனது கிராமம் - பச்சாவானி போபாலில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குறைந்தது இரண்டு மூன்று பேர் அங்கு ஆன்லைன் டிஜிட்டல் கடைகளைத் திறந்துள்ளனர். சிலர் போட்டோ ஸ்டுடியோக்களுக்காக தலா ஒன்று அல்லது இரண்டு லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.
பிரதமர் - அருமை.
பயனாளி - நான் 60-70 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வேலையைச் செய்தேன், இன்று நான் மாதத்திற்கு 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறேன் சார்.
பிரதமர் - உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பயனாளி - இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான். மிக்க நன்றி சார்.
பிரதமர் - உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
பயனாளி - நாங்கள் பிரதமருடன் பேசுகிறோம் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படவில்லை. எங்கள் வீட்டிலிருந்து யாரோ ஒருவர், எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் எங்களுடன் பேசுவது போல் உணர்ந்தேன். தற்போது நடைபெற்று வரும் முத்ரா கடன் திட்டத்தில் நாங்கள் எவ்வாறு வெற்றி பெற்றுள்ளோம் என்ற முழு கதையையும் கூறுகிறேன். நான் குஜராத்தின் பாவ்நகரில் இருந்து வருகிறேன்.
பிரதமர் - நீங்கள் அனுபவத்தை கூறுங்கள்?
பயனாளி - நான் ஆதித்யா டெக் லேப்பின் நிறுவனர், இதில் நான் 3 டி பிரிண்டிங், ரிவர்ஸ் இன்ஜினியரிங் ரேபிட் புரோட்டோடைப்பிங் வேலைகள், சில ரோபாட்டிக்ஸ் வேலைகளைச் செய்கிறேன். நான் இறுதியாண்டு மெக்கட்ரானிக்ஸ் மாணவன் என்பதால், ஆட்டோமேஷன், அனைத்திலும் எனக்கு ஆர்வம் அதிகம். எனவே, முத்ரா கடனில் இருந்து இதை நான் தொடங்கினேன். இப்போது, எனக்கு 21 வயதாகிறது. இப்போ மாசம் ₹30000 முதல் ₹35000 வரைக்கும் சம்பாதிக்கிறேன் சார்.
பயனாளி - நான் ஆந்திராவிலிருந்து வந்தவன். எனக்கு இந்தி தெரியாது. தெலுங்கு தெரியும்.
பிரதமர் - பரவாயில்லை, இனி தெலுங்கில் பேசுங்கள்.
பயனாளி - அப்படியா சார்!! எனக்கு 2009ல் திருமணம் நடந்தது சார். நான் 2019 வரை இல்லத்தரசியாக இருந்தேன்.சணல் பைகள் தயாரிப்பதற்காக கனரா வங்கியின் பிராந்திய பயிற்சி மையத்தில் பதின்மூன்று நாட்கள் பயிற்சி பெற்றேன். வங்கி மூலம் முத்ரா திட்டத்தின் கீழ் ₹2 லட்சம் கடன் பெற்றேன். நான் நவம்பர் 2019-ல் எனது தொழிலைத் தொடங்கியுள்ளேன். கனரா வங்கி என் மீது நம்பிக்கை வைத்து ₹2 லட்சம் வழங்கியது. அவர்கள் எந்த ஜாமீனும் கேட்கவில்லை. 2022 ஆம் ஆண்டில், எனது கடன் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, கனரா வங்கி கூடுதலாக ₹9.5 லட்சம் அனுமதித்துள்ளது. இப்போது எனக்கு கீழ் பதினைந்து பேர் வேலை செய்கிறார்கள்.
பிரதமர் - அதாவது, நீங்கள் ₹2 லட்சத்திலிருந்து தொடங்கி ₹9.5 லட்சத்தை எட்டினீர்கள்.
பயனாளி - ஆமாம் ஐயா.
பிரதமர் - உங்களுடன் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்?
பயனாளி - 15 உறுப்பினர்கள் ஐயா.
பிரதமர் - 15.
பயனாளி - அனைவரும் இல்லத்தரசிகள். கிராமப்புற சுய வேலைவாய்ப்பு மைய பயிற்சியாளர்கள். இந்த வாய்ப்புக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நன்றி, நன்றி, மிக்க நன்றி ஐயா.
பிரதமர் - நன்றி, நன்றி, நன்றி.
பயனாளி - ஐயா என் பெயர் பூனம் குமாரி. ஐயா நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன், எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.
பிரதமர் - முதல் முறையாக தில்லி வந்திருக்கிறீர்களா?
பயனாளி - ஆமாம் ஐயா.
பிரதமர் - நல்லது
பயனாளி - நான் விமானத்தில் பயணம் செய்வது இதுதான் முதல் முறை சார்.
பிரதமர் - மகிழ்ச்சி.
பயனாளி - என் குடும்பத்தில் மிகவும் வறுமை இருந்தது. நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நபர். முத்ரா கடன் மூலம் 8 லட்சம் லோன் வாங்கி பிசினஸ் ஆரம்பிச்சேன் சார். நான் அதை 2024-ல் தொடங்கினேன். ஐயா, நல்ல வளர்ச்சி இருந்தது ஐயா.
பிரதமர் - என்ன வேலை செய்கிறீர்கள்?
பயனாளி - ஐயா, விதைகள்... இதில் என் கணவர் நிறைய உதவுகிறார், அவர் பெரும்பாலான சந்தை வேலைகளை செய்கிறார், நானும் ஒரு ஊழியரை நியமித்துள்ளேன், ஐயா.
பிரதமர் – நல்லது. இப்போது ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
பயனாளி - ஐயா இது ₹60000 வரை சம்பாதிக்கிறேன். உங்களின் திட்டத்தால் இன்று நான் தன்னம்பிக்கை அடைந்துள்ளேன்.
பிரதமர் - சரி, நீங்கள் ஒரு பெரிய வேலை செய்துள்ளீர்கள்.
பயனாளி - நன்றி ஐயா! நான் உண்மையில் உங்களுடன் பேச விரும்பினேன் சார். இப்போது உங்களுடன் பேசுவதை நம்ப முடியவில்லை.
பிரதமர் - மற்றவர்களுக்கு முத்ரா கடன் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.
பயனாளி - கண்டிப்பாக ஐயா.
பிரதமர் – பாருங்கள், நாம் சிறுவர்களாக இருந்தபோது, படித்து வேலை செய்வதுதான் சிறந்தது என்று நம்பினோம். ஆனால் இன்று இந்திய இளைஞர்களிடம் உள்ள தொழில்முனைவோர் திறன்கள் அதிகம் உள்ளன. அவர்களுக்கு கரம் நீட்டி, உதவி கிடைத்தால், அது மகத்தான பலன்களைத் தரும். இந்த முத்ரா திட்டம் அனைவருக்கும் கண் திறப்பு திட்டமாகும். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இதில் முன்வந்துள்ளனர். கடனுக்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச நபர்கள், கடன் பெறும் அதிகபட்ச நபர்கள் மற்றும் கடனை விரைவாக திருப்பிச் செலுத்துபவர்கள் பெண்கள் தான். பணம் கிடைத்தவுடன், அதை சரியாகப் பயன்படுத்துவது, உங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கொண்டுவரும். நான் கூறுவது என்னவென்றால், நமது இளைய தலைமுறையினர் தாங்களாகவே சொந்தமாக தொழில் தொடங்க அவர்களைத் தயார்படுத்த வேண்டும். இந்த முத்ரா திட்டம் முன்னேற்றத்திற்கான ஒரு சிறந்த வடிவம். நீங்கள் இந்த வெற்றியை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வீர்கள் என்று நம்புகிறேன். சமூகம் உங்களுக்கு கொடுத்துள்ளது. நீங்களும் சமூகத்திற்கு கொடுக்க வேண்டும். நாமும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்.
நல்லது, மிக்க நன்றி.
***
(Release ID: 2119993)
TS/PLM/AG/KR
(Release ID: 2120363)
Visitor Counter : 20