தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேவ்ஸ்: இந்தியாவின் மங்கா & அனிம் வளர்ச்சி

Posted On: 07 APR 2025 9:54AM by PIB Chennai

பார்வைத் திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி கலைஞரான ரேஷம் தல்வார் எப்போதும் தனது குரலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.  அவரது குரலானது உணர்ச்சி, வெளிப்பாடு மற்றும் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் திறனைக் கொண்டிருந்தது. தனது குறைபாடு அவரது திறமையை கட்டுப்படுத்தும் சக்தியாக இல்லை.  அதற்கு மாற்றாக, அவரது குரல் மூலம் மிகவும் போட்டி நிறைந்த உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தில்லியில் நடைபெற்ற வேவ்ஸ் அனிம் & மங்கா போட்டியில்குரல் நடிப்பு பிரிவில் வெற்றி பெற்றது அவரது பயணத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தியது. அவரது கலைத்திறன் எவ்வித தடைகளையும் கடந்து தனது திறமையை நிரூபிக்க முடியும் என்பதை உணர்த்தியது. ரேடியோ ஜாக்கிங், வாய்ஸ் ஓவர், ஆடியோ எடிட்டிங் போன்ற துறைகளில் ரேஷமின் நிபுணத்துவம் ஏற்கனவே  அவரது திறமைகளை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது. வேவ்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றது அவருக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.  இது அவரது தொழில்முறை சார்ந்த திறமைக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சங்கத்துடன் இணைந்து மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மாற்றத்திற்கான இந்த முயற்சி, படைப்பாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் அனிம் மற்றும் மங்கா பிரிவில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாம்!! என்பது பிரபலமான ஜப்பானிய போக்கை உள்ளூருக்கு ஏற்ப தகவமைத்து பயன்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்கிறது. இது இந்திய மற்றும் உலகளாவிய படைப்பாளிகளுக்கு வெளியீடு, விநியோகம், தொழில்துறை சார்ந்த வாய்ப்புகள் மற்றும் கலை சம்பந்தப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் உதவுகின்றன.  இந்த போட்டி மாநில அளவில் 11 நகரங்களில் நடத்தப்படுகிறது. மும்பையில் நடைபெறும் உலக ஒளி ஒலி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025-ல் தேசிய அளவிலான இறுதிப் போட்டி நடைபெறும்.

வாம் (வேல்ஸ் அனிம் மற்றும் மங்கா) போட்டிகள்  மே 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் நடைபெற உள்ளன. டாவோஸ், கான்ஸ் போன்ற புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் இருந்து உத்வேகம் பெற்று, ஊடகம், பொழுதுபோக்கு துறையில் இந்தியாவை உலக அளவிலான முன்னணி நாடாக உருவெடுக்ச செய்வதை இந்த வேவ்ஸ் உச்சி மாநாடு நோக்கமாக கொண்டுள்து. இது திரைப்படங்கள், ஓடிடி தளங்கள், மின்னணு விளையாட்டு, காமிக்ஸ், டிஜிட்டல் மீடியா, செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட மெய்நிகர் காட்சிகள் போன்ற பிரிவுகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

***

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119648

TS/SV/LDN/KR


(Release ID: 2119695) Visitor Counter : 21