பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராமாக்கியென் எனப்படும் மனங்கவரும் தாய்லாந்து ராமாயண நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 APR 2025 1:02PM by PIB Chennai

இந்தியா, தாய்லாந்து இடையேயான ஆழ்ந்த கலாச்சார, நாகரீக உறவுகள் குறித்து பாராட்டு தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று ராமாக்கியென் என்ற மனங்கவரும் தாய்லாந்து  ராமாயண நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தனித்தனியான பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:

"இதுபோன்ற கலாச்சார பிணைப்பு வேறெதுவும் இல்லை!

ராமாக்கியென் என்னும் தாய்லாந்து ராமாயணத்தின் மனங்கவரும் நிகழ்ச்சியைக் கண்டேன். இந்தியா, தாய்லாந்து இடையேயான பகிரப்பட்ட கலாச்சார மற்றும் நாகரீக உறவுகளை உண்மையிலேயே அழகாக எடுத்துக்காட்டிய வளமான அனுபவமாக இது இருந்தது.

உண்மையிலேயே ஆசியாவின் பல பகுதிகளிலும் உள்ள இதயங்களையும், மரபுகளையும் இணைப்பதை ராமாயணம் தொடர்கிறது.

***

(Release ID: 2118156)

TS/SMB/AG/SG

 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2118190) வருகையாளர் எண்ணிக்கை : 39