வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஸ்டார்ட் அப் மகா கும்பமேளாவைத் தொடங்கி வைக்கவுள்ளார்
Posted On:
02 APR 2025 7:47PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 2025 ஏப்ரல் 3-5, தேதிகளில் பாரத மண்டபத்தில் நடைபெறவுள்ள ஸ்டார்ட்அப் மகா கும்பமேளாவின் இரண்டாவது பதிப்பைத் தொடங்கி வைப்பார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா விழாவில் சிறப்புரையாற்றுவார்.
இந்த நிகழ்வின் ஒப்பிடமுடியாத அளவு மற்றும் பங்கேற்பாளர்களின் பன்முகத்தன்மை, தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்கள் ஒன்றிணைவதற்கும், யோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், நீடித்த இணைப்புகளை உருவாக்குவதற்கும் விலைமதிப்பற்ற தளத்தை வழங்கும். புதுமை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம், ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா, தொழில்முனைவோர் வெற்றியின் அடுத்த அலைக்கு அடித்தளம் அமைக்கும். இந்த ஆண்டு பதிப்பின் போது, பழங்குடி தொழில்முனைவோர் பங்கேற்க உள்ளனர், இதில் ஐ.ஐ.எம் கொல்கத்தா, ஐ.ஐ.எம் காஷிபூர் மற்றும் ஐ.ஐ.டி பிலாய் ஆகியவற்றில் நிறுவப்பட்டவை உட்பட 45+ புத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பும் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளை விளக்கிய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ், "ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா இந்திய மாவட்டங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள புத்தொழில் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் உண்மையான 'சங்கமாக' இருக்கும். இந்தியாவின் பல மாவட்டங்கள் மற்றும் 50 நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஒன்றிணைவதற்கு, இந்த நிகழ்வு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அடுத்த மூன்று நாட்களில் சில முன்னோடி யோசனைகள் மற்றும் வளமான விவாதங்களை எதிர்நோக்குகிறேன்”, என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2118013
***
(Release ID: 2118013)
RB/DL
(Release ID: 2118068)
Visitor Counter : 20