உள்துறை அமைச்சகம்
இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை வெறும் 6 ஆகக் குறைந்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
01 APR 2025 11:52AM by PIB Chennai
நக்சல் தீவிரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் நமது நாடு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மோடி அரசு நக்சலிசத்திற்கு இரக்கமற்ற அணுகுமுறை, அனைத்து பரவலான வளர்ச்சிக்கான இடைவிடாத முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று திரு அமித் ஷா கூறியுள்ளார்.
2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலிசத்தை வேரோடு களைய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. நாட்டில் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்தது. இவற்றில், மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 6-ஆகவும், கவலைக்குரிய மாவட்டங்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 6-ஆகவும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இதர மாவட்டங்களின் எண்ணிக்கையும் 17-லிருந்து 6-ஆகவும் குறைந்துள்ளது.
சத்தீஸ்கரில் இருந்து 4 மாவட்டங்கள் (பிஜாப்பூர், கான்கெர், நாராயண்பூர் மற்றும் சுக்மா), ஜார்க்கண்டிலிருந்து 1 (மேற்கு சிங்பும்), மகாராஷ்டிராவிலிருந்து 1 (கட்சிரோலி) ஆகியவை இதில் அடங்கும்.
நக்சலிசத்திற்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் காரணமாக, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இதர மாவட்டங்களின் எண்ணிக்கையும் 17-லிருந்து 6-ஆகக் குறைந்துள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பொது உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்காக சிறப்பு மத்திய நிதியுதவி என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் முறையே ரூ.30 கோடி மற்றும் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தவிர, தேவைக்கேற்ப இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
கடந்த ஓராண்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டதும், சாலை விரிவாக்கம், போக்குவரத்து வசதிகள், தண்ணீர், மின்சாரம் மற்றும் அரசின் பிற நலத்திட்டங்கள் கிராம மக்களை சென்றடைந்ததும் இடதுசாரி தீவிரவாத சூழ்நிலையில் ஏற்பட்ட துரித முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.
***
(Release ID: 2117140)
TS/PKV/RR/SG
(Release ID: 2117173)
Visitor Counter : 24
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam