பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நிலநடுக்க துயரம் குறித்து மியான்மரின் மூத்த ஜெனரல்  மின் ஆங் ஹ்லேங்குடன் பிரதமர் பேச்சு

Posted On: 29 MAR 2025 1:41PM by PIB Chennai

 

நிலநடுக்க துயரச் சம்பவத்திற்கு இடையே, மியான்மரின் மூத்த ஜெனரல்  மின் ஆங் ஹ்லேங்குடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாடினார். இந்தச் சவாலான நேரத்தில் மியான்மருடன் ஒற்றுமையுடன் நிற்பதற்கு நெருங்கிய நண்பர் மற்றும் அண்டை நாடு என்ற முறையில் இந்தியாவின் திடமான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் தெரிவித்தார்.  இந்தப் பேரிடரைச் சமாளிக்கும்  வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான ஆபரேஷன் பிரம்மாவை இந்திய அரசு தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது :

"மியான்மரின் மூத்த ஜெனரல்  மின் ஆங் ஹ்லேங்குடன் பேசினேன். பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு  நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டன். நெருங்கிய நண்பர் மற்றும் அண்டை நாடு என்ற முறையில், இந்தக் கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது. பேரிடர் நிவாரணப் பொருட்கள், மனிதாபிமான உதவிகள், தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் ஆகியவை  ஆபரேசன் பிரம்மாவின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்படுகின்றன’’..

***

PKV/KV

 


(Release ID: 2116590) Visitor Counter : 43