தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஹாங்காங் திரைப்பட சந்தையில் வரலாற்று சிறப்புமிக்க இந்திய அரங்கம்
Posted On:
19 MAR 2025 6:10PM
|
Location:
PIB Chennai
உலக அரங்கில் இந்திய சினிமாவுக்கு ஒரு மைல்கல் தருணமாக, முதல் இந்திய அரங்கம் மதிப்புமிக்க ஹாங்காங் சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சந்தையில் (FILMART) அறிமுகம். சர்வதேச திரைப்பட, ஊடகத் துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கும் வகையில், இந்த அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (என்எஃப்டிசி), வர்த்தக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய அரங்கத்திற்கு அங்குள்ள இந்திய துணைத் தூதரகம் ஆதரவளிக்கிறது. இந்த முயற்சி இந்திய சினிமாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, அதன் விரிவடைந்து வரும் உலகளாவிய தடம், சர்வதேச ஒத்துழைப்புகளை ஊக்குவித்தல், இந்தியாவின் கதை சொல்லும் சிறந்த திறன் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறவுள்ள உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (WAVES) விளம்பரப்படுத்துவதே இந்த இந்திய அரங்கின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112927
***
PLM/AG/DL
Release ID:
(Release ID: 2113010)
| Visitor Counter:
46