தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாளை சர்வதேச ஊடக உரையாடல் நிகழ்வின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

Posted On: 12 MAR 2025 4:09PM by PIB Chennai

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மத்திய அரசு நாளை(2025 மார்ச் 13)  புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் மாலை 4.30 மணிக்கு நடத்துகின்ற   உலக அளவிலான ஊடக உரையாடல் நிகழ்வின் முனானோட்ட நிகழ்ச்சியில் நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டுள்ளது. உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025-இல் மே 2 ஆம் தேதி மும்பையில் சர்வதேச ஊடக உரையாடல் நடைபெறுகிறது.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஊடக  நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் முன்னோட்ட நிகழ்ச்சி யில்

வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டு இணைந்து விரைவான வளர்ச்சியடைந்து  வரும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான ஒருங்கிணைந்த உலகளாவிய தளமாக வேவ்ஸ் உச்சிமாநாட்டின் மூலம் ஏற்படும் வாய்ப்புகளை எடுத்துரைப்பார்கள. இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்டு ஊடகம், பொழுதுபோக்கு துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளனர். 

மும்பையில் 2025 மே 2-ம் தேதி நடைபெறவுள்ள உலக பொழுதுபோக்கு உச்சிமாநாடு 2025-ல் உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் கலைஞர்களை ஒன்றிணைத்து சர்வதேச ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு  பொழுதுபோக்கு துறைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது தொடர்பான ஆக்கபூர்வமான ஆற்றல்மிக்க உரையாடலில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

TS/SV/AG/DL


(Release ID: 2110960) Visitor Counter : 12