பிரதமர் அலுவலகம்
மகா கும்பமேளா நிறைவடைந்ததையடுத்து, குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவிலுக்கு பிரதமர் வருகை
प्रविष्टि तिथि:
02 MAR 2025 8:32PM by PIB Chennai
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிறைவடைந்ததையடுத்து, குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவிலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சென்றார். இந்தக் கோவில் நமது கலாச்சாரத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும், துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவுக்குப் பிறகு, 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானதாக உள்ள சோமநாதர் கோவிலுக்குச் செல்வது என்று நான் முடிவு செய்திருந்தேன்.
இன்று, சோமநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்ததில் நான் நல்லாசி பெற்றவனாக உணர்ந்தேன். ஒவ்வொரு இந்தியரின் முன்னேற்றம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்தனை செய்தேன். இந்தக் கோவில் நமது கலாச்சாரத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது."
***
(Release ID: 2107610)
TS/PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2108011)
आगंतुक पटल : 61
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam