தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொள்கிறார்

Posted On: 03 MAR 2025 12:34PM by PIB Chennai

இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனம் (ஐ.ஐ.எம்.சி) தமது 56-வது பட்டமளிப்பு விழாவை 2025 மார்ச் 4 அன்று புதுதில்லியில் உள்ள மகாத்மா காந்தி மஞ்ச்சில் நடத்த உள்ளது. இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனத்தின் வேந்தரும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான திரு அஸ்வினி வைஷ்ணவ் இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

2023-24 பிரிவின் 9 படிப்புகளைச் சேர்ந்த 478 மாணவர்களுக்கு முதுகலை பட்டயச் சான்றிதழ்கள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றன. புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனம் மற்றும் அதன் ஐந்து பிராந்திய வளாகங்களான தேன்கனல், ஐஸ்வால், அமராவதி, கோட்டயம், ஜம்முg ஆகிய இடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த விழாவின் போது பட்டயங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன், சிறந்து விளங்கிய 36 மாணவர்களுக்கு அவர்களின் கல்வித் திறனைப் பாராட்டி பல்வேறு பதக்கங்கள் மற்றும் ரொக்க விருதுகள் வழங்கப்பட உள்ளன.

புகழ்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்ச்சி, ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு கல்வியில் சிறந்து விளங்குவதற்கான இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது.

***

(Release ID: 2107672)
TS/IR/RR


(Release ID: 2107683) Visitor Counter : 30