தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பேட்டில் ஆஃப் பேண்ட்ஸ் குளோபல்

Posted On: 28 FEB 2025 5:02PM by PIB Chennai

தி பேட்டில் ஆஃப் தி பேண்ட்ஸின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, வேவ்ஸ் இப்போது பேட்டில் ஆஃப் பேண்ட்ஸ் குளோபல் நிகழ்வை  பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. இந்த உற்சாகமான புதிய முயற்சி பரந்த பார்வையாளர்களை ஈர்க்கவும், இளைய தலைமுறையினருக்கு இசையின் வளமான அழகு மற்றும் பன்முகத்தன்மையை அறிமுகப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேவ்ஸ் சீசன் 1-இன் இந்தியாவில் படைப்போம் சவாலின் ஒரு பகுதியாக, பிரசார் பாரதி மற்றும் சாரேகாமாவுடன் இணைந்து நடத்தப்படும் இந்த நிகழ்வு, பங்கேற்கும் இசைக்குழுக்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது.

உலக ஒலி ஒளி & பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (வேவ்ஸ்) முதல் பதிப்பு, ஒட்டுமொத்த ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையை ஒன்றிணைக்க தயாராக உள்ள ஒரு தனித்துவமான தளமாகும். இந்த நிகழ்வு ஒரு முதன்மையான உலகளாவிய நிகழ்வாகும், இது உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறையின் கவனத்தை  இந்தியாவின் மீது திருப்புவதையும், இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்  துறையுடன் அதன் திறமையை இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த உச்சிமாநாடு 2025 மே 1-4 வரை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் மாநாட்டு மையம்  & ஜியோ வேர்ல்ட் கார்டனில் நடைபெறும்பேட்டில் ஆஃப் பேண்ட்ஸ் குளோபல்சர்வதேச போட்டி படைப்பாற்றல் மற்றும் இசையின் வரம்புகளை விரிவு படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தொழில்துறைக்குள் சமூகம், புதுமை மற்றும் வளர்ச்சியின் உணர்வை ஊக்குவிக்கிறது.

பேட்டில் ஆஃப் பேண்ட்ஸ் குளோபல் பல்வேறு இசை திறமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான தனித்துவமான தளத்தை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 5 உலகளாவிய இசைக்குழுக்கள் மதிப்புமிக்க வேவ்ஸ் மேடையில் முதல் 5 இந்திய இசைக்குழுக்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தும், இது உலகளாவிய மற்றும் இந்திய இசையின் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும். இந்த முயற்சி இந்தியாவின் வளமான இசை மரபுகளைக் கொண்டாடும் அதே நேரத்தில் உலக இசையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106966

*****

RB/DL


(Release ID: 2107131) Visitor Counter : 17