பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 13 FEB 2025 9:36AM by PIB Chennai

இன்று உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மாதம் 23-ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம் பெறும் வகையில், தங்கள் கருத்துக்களையும் உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“உலக வானொலி தின வாழ்த்துக்கள்!

வானொலியானது  மக்களுக்குத் தகவல் அளித்தல், ஊக்கமளித்தல் மற்றும்  மக்களுடன் இணைத்தல் ஆகியவற்றால் பலருக்கும் காலத்தால் அழியாத உயிர்நாடியாக இருந்து வருகிறது. செய்தி மற்றும் கலாச்சாரம் முதல் இசை மற்றும் கதை சொல்லல் வரை, படைப்பாற்றலைக் கொண்டாடும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இது விளங்குகிறது.

வானொலி உலகத்துடன் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இந்த மாதம் 23-ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்காக உங்கள் கருத்துக்களையும் உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

https://www.mygov.in/group-issue/inviting-ideas-mann-ki-baat-prime-minister-narendra-modi-23rd-february-2025

***

(Release ID: 2102566)
TS/PKV/RR/KR


(Release ID: 2102629) Visitor Counter : 36