பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நிகழ்வுகளின் பட்டியல்: பிரதமரின் பிரான்ஸ் பயணம் (10-12 பிப்ரவரி 2025)

Posted On: 12 FEB 2025 3:20PM by PIB Chennai

வ.எண்.

 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ ஒப்பந்தங்கள்/ திருத்தங்கள்

                துறைகள்

1.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த இந்தியா-பிரான்ஸ் பிரகடனம்

தொழில்நுட்பம் & புதுமை கண்டுபிடிப்புகள், அறிவியல் & தொழில்நுட்பம்

2.

2026-ம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் புதுமை  கண்டுபிடிப்புக்கான இலச்சினை வெளியீடு

தொழில்நுட்பம் & புதுமை கண்டுபிடிப்புகள், அறிவியல் & தொழில்நுட்பம்

3.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  மற்றும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கணினி அறிவியல் மற்றும் ஆட்டோமேஷன்  ஆராய்ச்சி நிறுவனம் இடையேயான மின்னணு அறிவியலுக்கான இந்தோ-பிரெஞ்சு மையத்தை நிறுவுவதற்கான விருப்பக் கடிதம்.

தொழில்நுட்பம் & புதுமை கண்டுபிடிப்புகள், அறிவியல் & தொழில்நுட்பம்

4.

பிரெஞ்சு புத்தொழில் தொழில் காப்பகம்  எஃப்-ல் 10 இந்திய புத்தொழில் நிறுவனங்களை நடத்துவதற்கான ஒப்பந்தம்.

தொழில்நுட்பம் & புதுமை கண்டுபிடிப்புகள், அறிவியல் & தொழில்நுட்பம்

5.

மேம்படுத்தப்பட்ட  நவீன அணு உலைகள் மற்றும் சிறிய நவீன அணு உலைகளை கூட்டாக நிறுவுவதற்கான விருப்பப் பிரகடனம்

சிவில் அணுசக்தி

6.

இந்திய அணுசக்தித் துறை மற்றும் பிரான்சின் பிரெஞ்சு அணுசக்தி மற்றும் மாற்று எரிசக்தி  ஆணையம் இடையேயான உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையத்துடன் ஒத்துழைப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்.

சிவில் அணுசக்தி

7.

 இந்தியாவின்  உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையம், பிரான்சின் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவின் அணுசக்தித்துறை மற்றும் பிரான்சின் அணுசக்தி மற்றும் மாற்று எரிசக்தி  ஆணையம் இடையேயான ஒப்பந்தத்தை செயல்படுத்துதல்.

சிவில் அணுசக்தி

8.

மூன்று கூட்டாண்மை மேம்பாட்டு ஒத்துழைப்பில் விருப்ப இணைப் பிரகடனம் 

இந்தோ-பசிபிக்/நீடித்தமேம்பாடு

9.

மார்சேயில் இந்திய துணைத் தூதரகத்தை கூட்டாக திறந்துவைத்தல்

கலாச்சாரம்/ மக்களிடையேயான தொடர்பு

10.

சுற்றுச்சூழல் மாற்றம், பல்லுயிர் பெருக்கம், வனங்கள், கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான விருப்பப் பிரகடனம்.

சுற்றுச்சூழல்

 

***

(Release ID: 2102246)

AD/IR/AG/DL


(Release ID: 2102482) Visitor Counter : 31