உள்துறை அமைச்சகம்
2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்படும் - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
09 FEB 2025 4:40PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இது குறிப்பிடத்தக்க வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில் பாதுகாப்புப் படையினர் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், இந்த நடவடிக்கையில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களுக்கு எதிரான நக்சலிஸத்தை கொடுக்கும் நடவடிக்கையின் போது இன்று இரண்டு துணிச்சலான வீரர்களை நாம் இழந்துள்ளோம் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த நாயகர்களுக்கு தேசம் எப்போதும் கடன்பட்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு திரு அமித் ஷா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் நக்ஸலிசத்தால் எந்தவொரு குடிமகனும் தங்கள் உயிரை இழக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.
***
PLM/KV
(Release ID: 2101169)
Visitor Counter : 44
Read this release in:
Odia
,
Malayalam
,
Assamese
,
Bengali
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
English
,
Urdu
,
Telugu