ஜவுளித்துறை அமைச்சகம்
2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் ஜவுளி அமைச்சகத்திற்கு ரூ. 5272 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது
Posted On:
04 FEB 2025 11:26AM by PIB Chennai
மத்திய நிதியமைச்சர் 2025 பிப்ரவரி 1, அன்று மத்திய பட்ஜெட் 2025-26ஐ தாக்கல் செய்தார். 2025-26-ம் ஆண்டில் ஜவுளி அமைச்சகத்திற்கு ரூ. 5272 கோடி (பட்ஜெட் மதிப்பீடுகள்) ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2024-25-ம் ஆண்டின் பட்ஜெட் ரூ. 4417.03 கோடியோடு ஒப்பிட 19 சதவீதம் அதிகமாகும்.
தேக்கமடைந்த பருத்தி உற்பத்தித்திறனின் சவால்களை எதிர்கொள்ள, பருத்தி உற்பத்தித்திறனை அதிகரிக்க, ஐந்தாண்டு பருத்தி இயக்கம் மத்திய பட்ஜெட் 2025-26-ல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கப்படும். உள்நாட்டு உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம், இந்த முயற்சி மூலப்பொருள் கிடைப்பை உறுதிப்படுத்தும், இறக்குமதி சார்பைக் குறைக்கும் மற்றும் இந்தியாவின் ஜவுளித் துறையின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கும். இத்துறையில் 80% திறன் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகிறது.
வேளாண்-ஜவுளி, மருத்துவ ஜவுளி போன்ற தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியைப் போட்டி விலையில் ஊக்குவிப்பதற்காக, முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட ஜவுளி இயந்திரங்களின் பட்டியலில் மேலும் இரண்டு வகையான ஷட்டில்-லெஸ் தறிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜவுளித் தொழிலில் பயன்படுத்தப்படும் ஷட்டில் இல்லாத தறிகளான ரேப்பியர் தறிகள் (நிமிடத்திற்கு 650 மீட்டருக்கு குறைவு) மற்றும் ஷட்டில் இல்லாத தறி ஏர் ஜெட் தறிகள் (நிமிடத்திற்கு 1000 மீட்டருக்கு குறைவு) மீது தற்போதுள்ள 7.5% வரி முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு உயர்தர இறக்குமதி செய்யப்பட்ட தறிகளின் விலையைக் குறைக்கும். இது நெசவுத் துறையில் நவீனமயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை எளிதாக்குகிறது. இது தொழில்நுட்ப ஜவுளித் துறையான வேளாண் ஜவுளி, மருத்துவ ஜவுளிகளில் "இந்தியாவில் உற்பத்தி செய்வோம்" என்பதை அதிகரிக்க செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099411
***
(Release ID: 2099411)
TS/IR/RR/KR
(Release ID: 2099438)
Visitor Counter : 78