WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

திரைப்பட முன்னோட்ட தயாரிப்பு(ட்ரைலர் )போட்டி மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்துதல்

 Posted On: 03 FEB 2025 5:46PM |   Location: PIB Chennai

 

கடந்த வாரம் குருதேக் பகதூர் 4-வது நூற்றாண்டு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற திரைப்பட முன்னோட்ட தயாரிப்பு (ட்ரைலர்) போட்டி குறித்த நிகழ்ச்சி முக்கிய இடத்தைப் பிடித்தது. இது நாடு தழுவிய திரைப்பட முன்னோட்ட தயாரிப்புப் போட்டியின் பிரமாண்டமான இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக திகழும் வகையில் அமைந்தது.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் ரெஸ்கில் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பங்கேற்றன. இதில் பங்கேற்கபவர்கள் கதைசொல்லல், வீடியோ எடிட்டிங், கலையை சோதித்துப்  பார்த்துக்கொள்ள ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ளது.

படைப்பாற்றல் மற்றும் புதுமைக்கான ஒரு தளம்

வேவ்ஸ் 2025-ன் ஒரு பகுதியாக படைப்பாற்றல் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த திரைப்பட முன்னோட்ட தயாரிப்பு போட்டி நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது சிந்தனையை விரிவுப்படுத்தும் வகையிலும் இந்தப் போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான முயற்சி மாணவர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் விரிவான உள்ளடக்க தொகுப்புகளில் இருந்து ஈர்க்கக்கூடிய வகையில் திரைப்பட முன்னோட்டங்களை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது. வீடியோ எடிட்டிங், கதைசொல்லுதல், திரைப்பட முன்னோட்ட தயாரிப்பு ஆகியவற்றில் பங்கேற்பாளர்களின் படைப்பாற்றல் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில், 3 மாதகால தீவிர பயிற்சியும் குழுவாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099217

***

TS/SV/RJ/KV


Release ID: (Release ID: 2099361)   |   Visitor Counter: 57