பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முக்கிய சிறப்பம்சங்கள்: 2025-26 யூனியன் பட்ஜெட்டில் பாலின பட்ஜெட் ஒதுக்கீடுகள்

Posted On: 02 FEB 2025 3:36PM by PIB Chennai

 

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2024-25 நிதியாண்டில் 6.8% ஆக இருந்த மொத்த  பட்ஜெட்டில் பாலின பட்ஜெட் ஒதுக்கீட்டின் பங்கு 2025-26 நிதியாண்டில் 8.86% ஆக அதிகரித்துள்ளது.

2025-26 நிதியாண்டுக்கான பாலின பட்ஜெட் அறிக்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக ரூ 4.49 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2025-26 நிதியாண்டுக்கான பாலின பட்ஜெட்டில் தங்களின் ஒதுக்கீடுகளில் 30%க்கும் அதிகமாகப் பதிவாகியிருக்கும் முதல் 10 அமைச்சகங்கள்/துறைகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (81.79%), ஊரக வளர்ச்சித் துறை (65.76%), உணவு மற்றும் பொதுத் துறை விநியோகம் (50.92%), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (41.10%), புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (40.89%), சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை (39.01%), உயர்கல்வித் துறை (33.94%), பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (33.67%), உள்துறை அமைச்சகம் (33.47%) மற்றும் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை (31.50%).

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098912

***

PKV/KV

 


(Release ID: 2098976) Visitor Counter : 48