உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த, முதன்மையான இந்தியாவை நிர்மாணிக்கும் மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையை கொண்டுள்ளது மத்திய பட்ஜெட்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 01 FEB 2025 7:20PM by PIB Chennai

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த, முதன்மையான இந்தியாவை நிர்மாணிக்கும் மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையை கொண்டுள்ளது மத்திய பட்ஜெட் 2025-26 என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய இந்த  பட்ஜெட்டுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடியையும், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனையும் அவர் பாராட்டியுள்ளார்.

தொடர்ச்சியான எக்ஸ் தள பதிவுகளில் தமது கருத்துக்களை தெரிவித்துள்ள திரு அமித் ஷா,  விவசாயிகள், ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் முதல் பெண்கள் கல்வி, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, சுகாதாரம், புத்தொழில்கள், புதிய கண்டுபிடிப்பு, முதலீடு வரை அனைத்துத் துறைகளையும்  உள்ளடக்கிய இந்த பட்ஜெட் தற்சார்பு இந்தியா என்ற திரு மோடியின் கண்ணோட்டத்திற்கு மூல வரைபடமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் வரை வருமான வரி இல்லை என்ற பட்ஜெட் அறிவிப்பு உள்ளது என்று திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். 

விவசாயிகளின் நலனுக்கு மோடி அரசு உறுதிபூண்டிருப்பதை சுமார் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவதற்கான பிரதமரின் தன்-தானிய திட்ட அறிவிப்பு பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.  கிசான் கடன் அட்டையின் மூலம் பெறப்படும் கடன் அளவு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும் விவசாயிகளுக்கு  குறிப்பிடத்தக்க நிவாரணமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

36 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு மிகுந்த நிம்மதி அளிப்பதாகும் என்று குறிப்பிட்டுள்ள திரு அமித் ஷா, அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றும், 2025-26-ல் மட்டும் 200 சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098739

***

SMB/KV/KR

 


(Release ID: 2098764) Visitor Counter : 23