நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைந்த பயிர் உற்பத்தி உள்ள 100 மாவட்டங்களில் பிரதமரின் தன தான்ய கிருஷி திட்டம் தொடங்கப்படும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

Posted On: 01 FEB 2025 1:23PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2025-26 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில், வேளாண் உற்பத்தித்திறனை வலுப்படுத்துவற்கான திட்டங்களை அறிவித்தார்.

 

பிரதமரின் தன-தான்ய கிருஷி திட்டம்:

 

வேளாண் பயிர் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களின் இந்த தன தான்ய கிருஷி திட்டம் செயல்படுத்தப்படும். விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிர் பல்வகைப்படுத்தல், நிலையான விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது, பஞ்சாயத்து, வட்டார நிலைகளில் அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பை அதிகரிப்பது, நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவது, நீண்ட கால - குறுகிய கால கடன் கிடைப்பதை எளிதாக்குவது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.  இந்த திட்டம் 1.7 கோடி விவசாயிகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாநிலங்களுடன் இணைந்து விரிவான பல்துறை 'கிராமப்புற செழிப்புக்கான திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் மேலும் கூறினார்.

 

சமையல் எண்ணெய்களில் தற்சார்பை அடைவதற்காக, தேசிய எண்ணெய் வித்து இயக்கத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக திருமதி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். பருப்பு வகைகளில் தன்னிறைவை அடைவதில் அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளது என்று அவர் கூறினார். பருப்பு வகைகளின் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். துவரம் பருப்பு, உளுந்து, மசூர் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, "பருப்பு வகைகளில் தற்சார்பு அடைவதற்கான" 6 ஆண்டு திட்டத்தை அரசு தொடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

 

காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களின் உற்பத்தி, திறமையான விநியோகம், பதப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான திட்டம் மாநிலங்களுடன் இணைந்து தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098401

***

PLM /RJ /KR


(Release ID: 2098539) Visitor Counter : 136