நிதி அமைச்சகம்
சர்வதேச வர்த்தகத்தில் வர்த்தக ஆவணப்படுத்தல், நிதித் தீர்வுகளுக்கான ஒருங்கிணைந்த தளமாக ‘பாரத் டிரேட் நெட்’ அமைக்கப்பட உள்ளது: மத்திய பட்ஜெட் 2025-26
प्रविष्टि तिथि:
01 FEB 2025 1:15PM by PIB Chennai
மத்திய நிதி, பெரு நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
சர்வதேச வர்த்தகத்திற்கான மின்னணு பொது உள்கட்டமைப்பு, ‘பாரத்டிரேட்நெட்’ வர்த்தக ஆவணப்படுத்தல், நிதி தீர்வுகளுக்கான ஒருங்கிணைந்த தளமாக அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக . அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்து உள்ளார்.
2025-26 மத்திய பட்ஜெட்டில் இந்தியப் பொருளாதாரத்தை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பதற்காக உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்த ஆதரவு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இதற்கான துறைகள் அடையாளம் காணப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் பங்கேற்புடன் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தொழில்துறை 4.0 தொடர்பான வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்குத் தேவையான உயர் திறன்கள் மற்றும் திறமைகள் இரண்டும் இந்திய இளைஞர்களிடம் இருப்பதாக திருமதி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். "இளைஞர்களின் நலனுக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள உள்நாட்டு மின்னணு உபகரணங்கள் தொழிலுக்கு எங்கள் அரசு ஆதரவளிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098387
***
TS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2098503)
आगंतुक पटल : 81