நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 திட்டத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து ஆதரவு அதிகரிப்பு

Posted On: 01 FEB 2025 1:07PM by PIB Chennai

திறன் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 திட்டத்திற்கு மேம்பட்ட ஊட்டச்சத்து ஆதரவை அதிகரிக்க மத்திய பட்ஜெட் 2024-25 உத்தேசித்துள்ளது. இந்தத் திட்டம் 8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், 1 கோடி கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குகிறது. மேலும் வடகிழக்குப் பிராந்தியம் மற்றும் முன்னேற விரும்பும் மாநிலங்களின்(ஆஷ்பைரேஷனல் மாவட்டங்கள்) சுமார் 20 லட்சம் வளரிளம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து கிடைக்க இது வகை செய்கிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல் நேர புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும். 2025-26-ல் அத்தகைய 200 மையங்கள் அமைக்கப்படும். மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் அடுத்த ஆண்டில் உருவாக்கப்படும். இது தொடர்ச்சியாக அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 கூடுதல் இடங்களை அதிகரிக்கும் மத்திய அரசின் இலக்கை நோக்கமாக கொண்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புற்றுநோய், அரிய வகை நோய்கள், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நிதியமைச்சர் 36 வகை உயிர் காக்கும் மருந்துகளுக்கு அடிப்படை சுங்கத்தீர்வையிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளித்துள்ளார். அதே சமயம் 6 உயிர்காக்கும் மருந்துகள், 5 சதவீத சலுகை சுங்கத்தீர்வைப் பட்டியலில் சேர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098378

***

(Release ID: 2098378)
TS/PKV/RR/KR


(Release ID: 2098499) Visitor Counter : 17