நிதி அமைச்சகம்
முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2025-ம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மற்றும் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையே 6.4% மற்றும் 9.7% ஆக வளரும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
Posted On:
01 FEB 2025 12:45PM by PIB Chennai
அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவின் மீது உலகளவிலான கவனம் திரும்பியுள்ளது. உலகளவிலான நிலையற்ற நிதிச்சூழல் அதிகரித்து வரும் நிலையில், சவால்களுக்கு இடையே இந்தியா சர்வதேச பொருளாதார ஒழுங்கை நிலைநாட்டியுள்ளது. அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் மத்திய அரசு நிதிக்கொள்கைகளை வகுத்து வருகிறது. இந்த அணுகுமுறை வளர்ச்சியின் வேகத்தை ஊக்குவித்துள்ளதுடன், உலக அளவிலான மற்றும் உள்நாட்டு சவால்களை சமாளிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதிக்கொள்கை மற்றும் நிதிக்கொள்கை உத்தி குறித்த அறிக்கையை தாக்கல் செய்தபோது இவ்வாறு கூறினார்.
இதன்படி 2024-25-ம் நிதியாண்டில் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் உண்மையான மற்றும் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையே 6.4% மற்றும் 9.7% ஆக வளரும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி பெயரளவிலான ஜிடிபி 10.1 சதவீதமாக மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2025-26-ம் நிதியாண்டில் முதல் காலாண்டில் பணவீக்க விகிதம் 4.6 சதவீதமாகவும். இரண்டாவது காலாண்டில் 4 சதவீதமாகவும் இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 4.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26-ம் நிதியாண்டில் இது 4.5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடியாக இருக்கும் (ஜிடிபியில் இது 3.1 சதவீதம்) இந்தியாவின் எந்திரவியல் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 1.6 சதவீதம் வீதம் வளர்ந்து வருகிறது. அதே சமயம் சேவைகள் ஏற்றுமதி, 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கட்டத்தில் முந்தைய ஆண்டை விட 11.6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 25-ம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் ஜிடிபியில் 1.2 சதவீதமாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 1.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2024-25-ம் ஆண்டில் ஜிடிபியில் 4.8 சதவீதமாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2025-26-ம் ஆண்டில் 4.4 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098357
***
TS/PKV/RR/KR
(Release ID: 2098462)
Visitor Counter : 28