நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் நுகர்வு மற்றும் வருமானத்தை உருவாக்கும் செயல்பாட்டை அரசு நலத்திட்டங்கள் ஊக்குவிக்கின்றன: பொருளாதார ஆய்வறிக்கை

Posted On: 31 JAN 2025 1:38PM by PIB Chennai

கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் சமூக உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் மக்களை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக 2024-25 பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆவணத்தை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நிதியாண்டு 21 இல் 23.3%-லிருந்து நிதியாண்டு 25-ல் 26.2% சதவீதமாக அல்லது 15% ஆக அதிகரிப்பதை எடுத்துக்காட்டும் பொருளாதார ஆய்வறிக்கை, மொத்த செலவினத்தின் சதவீதமாக அரசின் சமூக சேவை செலவினங்களில் அதிகரித்து வரும் போக்கைக் குறிப்பிடுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் செலவு நிதியாண்டு 21 இல் ரூ. 14.8 லட்சம் கோடியாக இருந்தபோதிலும், அது நிதியாண்டு 25-ல் ரூ.25.7 லட்சம் கோடியாக படிப்படியாக அதிகரித்துள்ளது.

கல்வியைப் பொறுத்தவரை, இந்தத் துறையில் செலவினம் 12% இல் வளர்ந்துள்ளதாகவும், நிதியாண்டு 21-ல் ரூ. 5.8 லட்சம் கோடியாக இருந்ததாகவும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. 2025 நிதியாண்டில் 9.2 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மறுபுறம், சுகாதாரத் துறை செலவினம் 18 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து வரும் போக்கைக் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது, இது 2021 நிதியாண்டில் ரூ. 3.2 லட்சம் கோடியிலிருந்து 2025 நிதியாண்டில் ரூ.6.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2015 நிதியாண்டு முதல் 2022 நிதியாண்டு வரை நாட்டின் மொத்த சுகாதார செலவினத்தில், அரசு சுகாதார செலவினங்களின் பங்கு 29.0 சதவீதத்திலிருந்து 48.0 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097869

***

PKV/RR/DL


(Release ID: 2098210) Visitor Counter : 6