நிதி அமைச்சகம்
2024-ம் நிதியாண்டில் 5.4%-மாக இருந்த சில்லரை பணவீக்க விகிதம் 2025-ம் நிதியாண்டில் 4.9%-மாக குறையும்
प्रविष्टि तिथि:
31 JAN 2025 1:55PM by PIB Chennai
சில்லரை பணவீக்க விகிதம் 2024-ம் நிதியாண்டில் இருந்த 5.4% என்ற அளவில் இருந்து 2025-ம் நிதியாண்டில் 4.9%-மாக குறையும் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2024-ம் நிதியாண்டு மற்றும் 2025-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாத காலத்தில் மொத்த பணவீக்கம் 0.9% புள்ளிகள் குறைந்தது. எரிபொருள் விலை பணவீக்கம் மற்றும் முக்கிய சேவைகள் பணவீக்கம் குறைவு காரணமாக இந்த நிலை இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பை வலுப்படுத்தியதுடன், வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களை விடுவித்தல், பற்றாக்குறை காலத்தில் இறக்குமதியை எளிமைப்படுத்தும் முயற்சிகள் போன்ற அரசின் நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக பணவீக்கம் குறைந்தது என பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097892
***
TS/PKV/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2098185)
आगंतुक पटल : 154